திடீர் ஜிலேபி (Thideer jilebi recipe in tamil)

Shuju's Kitchen
Shuju's Kitchen @cook_23403948

#arusuvai1
20 நிமிடத்தில் திடீர் ஜிலேபி நீங்களும் ஈசியா செய்யலாம்

திடீர் ஜிலேபி (Thideer jilebi recipe in tamil)

#arusuvai1
20 நிமிடத்தில் திடீர் ஜிலேபி நீங்களும் ஈசியா செய்யலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1கப் மைதா மாவு
  2. 1/4கப் தயிர்
  3. 1சிட்டிகை சோடாஉப்பு
  4. 1சிட்டிகை சிவப்பு(அ) மஞ்சள் கலர் பவுடர்
  5. சக்கரை பாகு செய்ய தே. பொ
  6. 1கப் சக்கரை
  7. 1/2கப் தண்ணீர்
  8. 1 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு கிண்ணத்தில் 1கப் மைதா 1/4கப் தயிர் 1சிட்டிகை கேசரி கலர் பவுடர் சேர்க்கவும்

  2. 2

    அத்துடன் 1சிட்டிகை சோடாஉப்பு தண்ணீர் சேர்த்து கலக்கவும்

  3. 3

    சின்ன சின்ன கட்டிகள் இல்லாமல் நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும் 3 வது படத்தில் காட்டியுள்ளவாறு கலந்து கொள்ளவும்

  4. 4

    ஜிலேபிக்கு சக்கரை பாகு தயார் செய்ய 1கப் சக்கரை 1/2கப் தண்ணீர் சேர்க்கவும்

  5. 5

    அத்துடன் 1ஏலக்காய் 1சிட்டிகை சிவப்பு கலர் பவுடர் சேர்த்து கொதிவந்தவுடன் இறக்கிடலாம்(குறிப்பு:கம்பி பதம் பார்க்க வேண்டியதில்லை)

  6. 6

    இப்போது ரெடி பண்ணிய மாவை தயிர் கவர் (அ) எண்ணெய் கவரில் ஊற்றி ஒரு மூலையில் சின்னதாக வெட்டிக்கொள்ளவும்

  7. 7

    இந்த அளவிற்கு சின்னதாக வெட்டிக்கொள்ளவும்(குறிப்பு:அதில் போடப்படும் ஓட்டை சின்ன அளவாக இருக்கும்மாறு பாத்துக்கொள்ளவும் படத்தில் காட்டியுள்ளவாறு)

  8. 8

    இப்போது கடாயில் பொறிப்பதற்கு தே.அ எண்ணெய் ஊற்றி எண்ணெய் மிதமான சூடு இருக்கும் போது ஜிலேபி பிலிய ஆரம்பிக்கவும்(குறிப்பு:எண்ணெய் கண்டிப்பாக மிதமான சூட்டில் இருக்கனும்,கடாய் தட்டையாக இருக்கும்மாறு பாத்துக்கொள்ளவும்,கவரின் ஓட்டை சின்னதாக இருக்கும்மாறு பாத்துக்கொள்ளவும்)

  9. 9

    பிழிந்த ஜிலேபி வெந்ததும் சக்கரை பாகில் போட்டு எடுக்கவும்

  10. 10

    இப்போது நம்முடைய சூப்பர்ரான ஜூஸியான திடீர் ஜிலேபி தயார் நீங்களும் ஈசியா சூப்பர்ரா செஞ்சி அசத்தலாம் நண்பர்களே நீங்களும் ஈசியா செஞ்சி அசத்துங்க நண்பர்களே

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shuju's Kitchen
Shuju's Kitchen @cook_23403948
அன்று

Similar Recipes