நெய் முருங்கைக்காய் சாம்பார்

#GA4 week25 #drumstick இந்த சாம்பாரை இட்லி தோசை பொங்கல் போன்ற டிஃபன் வகைகள் உடன் பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும்.
நெய் முருங்கைக்காய் சாம்பார்
#GA4 week25 #drumstick இந்த சாம்பாரை இட்லி தோசை பொங்கல் போன்ற டிஃபன் வகைகள் உடன் பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முதல் பிரஷர் குக்கரில் 100 கிராம் துவரம் பருப்பை 100 மில்லி தண்ணீர் ஊற்றி சிறிது மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
குக்கரில் பருப்பு வேகும் நேரத்தில் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம் தக்காளியுடன் சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்வெங்காயம் லேசாக வதங்கியதும் அதனுடன் முருங்கைக்காய் மல்லி பொடி சாம்பார் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.(நான் அரைத்து வைத்துள்ள சாம்பார் பொடியில் காய்ந்த மிளகாய் மிளகாய் சேர்த்து வைத்திருக்கிறேன் காரம் அதிகம் தேவைப்படுபவர்கள் அதற்கு ஏற்ப தனி மிளகாய் பொடி சேர்த்துக் கொள்ளலாம்).
- 3
காய்கள் நன்றாக வதங்கியவுடன் பருப்பு வேகவைத்த தண்ணீரை சேர்த்து முருங்கைக்காய் வேகும் வரை கொதிக்க விடவும்.
- 4
காய் நன்றாக வெந்து மேலே வந்தவுடன் அதில் வேகவைத்த பருப்பை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு மிதமான தீயில் ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
- 5
பிறகு அதில் கொத்தமல்லி தழை தூவி கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு சீரகம் சேர்த்து தாளித்து ஊற்றினால் சுவையான சாம்பார் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
-
-
-
முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)
முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு ருசியாக இருக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்தால் முள்ளங்கி சாம்பார் மிகவும் ருசியாக கிடைக்கும் Banumathi K -
-
பஞ்சாபி உருளை கறி
#GA4 #punjabi # potato இது பஞ்சாபில் மிகவும் பிரசித்தி பெற்றது. பூரி , ரொட்டி க்கு சிறப்பாக இருக்கும். Saritha Srinivasan -
முருங்கைக்காய் சாம்பார்(Muruingakkai Sambar Recipe in Tamil)
#GA4/Drum stick/ Week 25* முருங்கையில் பொட்டாசியச் சத்து, வாழைப்பழத்தைக் காட்டிலும் அதிகம். புரதச்சத்து, முட்டைக்கு இணையாக முருங்கை இலையில் உண்டு. பாலைக் காட்டிலும், நான்கு மடங்கு கால்சியம் முருங்கையில் உண்டு. ஆரஞ்சைவிட அதிகமான வைட்டமின் சி-யும் முருங்கையில் உண்டு. மற்ற கீரைகளைவிட, முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். மொத்தத்தில், முருங்கை சங்ககாலம் தொட்டு நம்மிடம் இருந்த மாபெரும் வைட்டமின் டானிக்.* முருங்கைகாய் சாம்பாராக செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
#clubகாலை நேர அவசரத்தில் ஒரு அடுப்புல இட்லி ஊற்றி வைத்து பக்கத்துல சாம்பார் க்கு ரெடி செய்தா இட்லி வேகற இருபது நிமிடத்தில் சாம்பார் மணக்க மணக்க ரெடி ஆகிவிடும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
முருங்கைக்காய் வேர்க்கடலை கறி /Drumstick peanut curry
#lockdown 1#கோல்டன்அப்ரோன்3லாக்டவுன் ஆகையால் வெளியே காய்கறி வாங்க கடைக்குச் செல்ல முடியவில்லை.கொரோனா வைரஸ் கிருமிபாதிப்பு ஏற்படும் என்பதால் வீட்டில் முடங்கி கிடக்கின்றோம். மரத்தில் உள்ள முருங்கைக்காய் பறித்து முருங்கைக்காய் வேர்க்கடலை கறி செய்தேன் . Shyamala Senthil -
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
சாம்பார் சாதம்
#keerskitchenசூட சூட சாம்பார் சாதத்தை அப்பளம் மற்றும் தயிர் பச்சடி உடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்😋. Rainbow Shades -
பலாக்கொட்டை கத்தரிக்காய் சாம்பார் (jack fruit brinjal sambar recipe in tamil)
பழங்காலத்து கிராமத்தில் செய்த இந்த பலாக்கொட்டை, கத்தரிக்காய் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும். சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா உணவுகளுடன் பொருத்தமாக இருக்கும்.#vk Renukabala -
-
குறுமிளகு சிக்கன் ஃப்ரை
#Np3 காரசாரமான குறுமிளகு சிக்கன் ஃப்ரை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
முருங்கை காய் சாம்பார்
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். முருங்கைக்காய் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். குக்கரில் துவரம்பருப்பை கழுவி தண்ணீர் ஊற்றி வெங்காயம், தக்காளி, பெருங்காயம், மஞ்சள்தூள், சேர்த்து ஒரு விசில் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.குக்கரில் விசில் போனதும் திறந்து நன்கு கரண்டியால் கிளறிவிடவும். இப்போது பருப்பு முக்கால் பதமாக வெந்து இருக்கும். தனியே ஒரு பாத்திரத்தில் அரிசி கலைந்த தண்ணீர் 3 முறை தண்ணீர் எடுத்து கொள்ளவும் (மிகவும் சத்து உள்ளது. அதனால் தினமும் அரிசி கலைந்த தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தலாம்)அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து அடுப்பை பற்ற வைக்கவும். நன்கு கொதி வந்ததும் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். அடிபிடிக்காமல் கிளறி விடவும். நறுக்கிய முருங்கை காயை கழுவி தண்ணீர் வடிய விடவும். பிறகு கொதிக்கும் பருப்பில் சேர்க்கவும். காய்க்கு தேவையான உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் மூடி வைக்கவும். முருங்கைக்காய் முக்கால் பதம் வெந்ததும் சாம்பார் பொடியும், மிளகாய் தூளும் சேர்த்து நன்கு கிளறி விடவும். இப்போது குழம்புக்கு தேவையான அளவு உப்பு மீண்டும் சேர்க்கவும். முருங்கைக்காய் முழுதும் வெந்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். புளிகரைசலை கரைத்து சாம்பாரில் சேர்க்கவும். தாளிக்க ஒரு சிறிய கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து நன்கு பொறிய விடவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சாம்பாரில் சேர்க்கவும். சுவையான முருங்கை காய் சாம்பார் சாதம், இட்லி, தோசைக்கு ஏற்றது. வேறு காய்கள் சேர்க்காமல் தனியே முருங்கைக்காய் மட்டும் சேர்த்து சாம்பார் வைத்தால் ருசி அபாரம். Laxmi Kailash
More Recipes
கமெண்ட்