சமையல் குறிப்புகள்
- 1
1/2 கிலோ சோயா பீன்ஸை தோல் நீக்கி கழுவி வைக்கவும்.2 கைப்பிடி கொத்தமல்லி தழை, 2 பச்சை மிளகாய்,1 துண்டு இஞ்சி எடுத்து வைக்கவும். சிறிதளவு கறிவேப்பிலை எடுத்து வைக்கவும்.
- 2
எடுத்து வைத்த கொத்தமல்லித்தழை, இஞ்சி, பச்சைமிளகாயை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து வைக்கவும்.கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை,1 வரமிளகாய் கிள்ளியது சேர்த்து தாளித்து, அரைத்த கொத்தமல்லி தழை விழுதை சேர்த்து நன்கு வதக்கி விடவும்.
- 3
கொத்தமல்லித்தழையை நன்கு வதக்கி, பச்சை வாசனை நீங்கியவுடன் குக்கரில் வேக வைத்த சோயா பீன்ஸை தண்ணீர் வடித்து, உப்பு சேர்த்து சேர்க்கவும்.
- 4
அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கலந்து விடவும்.ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து பரிமாறவும். சுவையான மிகவும் சத்து நிறைந்த கொத்தமல்லி சோயாபீன்ஸ் சுண்டல் ரெடி.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கொத்தமல்லி தேங்காய் சட்னி
கொத்தமல்லி ஒரு சிறந்த சமையல் மூலிகை. நல்ல மணம் தருவதுடன், இரத்த அழுத்தம், குளுக்கோஸ் அளவு, கொழுப்பு அளவு கட்டுபாட்டில் வைக்கும். #Flavourful Lakshmi Sridharan Ph D -
-
-
More Recipes
கமெண்ட் (3)