எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. வடை மாவு செய்ய
  2. 250 கிராம் உளுத்தம் பருப்பு
  3. ஒரு இன்ச் அளவு நறுக்கிய இஞ்சி
  4. 1பச்சை மிளகாய்
  5. 1டேபிள் ஸ்பூன் முழு மிளகு
  6. உப்பு தேவையான அளவு
  7. 2 பெரிய வெங்காயம்
  8. 1 சிட்டிகை சமையல் சோடா
  9. கொத்துமல்லி இலை,கறிவேப்பில்லை
  10. 4 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  11. 1லிட்டர் கெட்டி தயிர்
  12. எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு
  13. தாளிக்க:
  14. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  15. 1/2 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  16. 1 டேபிள் ஸ்பூன் கடுகு
  17. 1/2 டேபிள் ஸ்பூன் பெருங்காயம்
  18. 2 காய்ந்த மிளகாய்
  19. கறிவேப்பில்லை
  20. பூந்தி

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் உளுத்தம் பருப்பை நன்றாக அலசி 1 மணி நேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். 1 மணி நேரம் ஊறிய உளுந்தை மிக்ஸில் இஞ்சி, பச்சை மிளகாய், முழு மிளகு மற்றும் உப்பு தேவையான அளவு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அரைக்கவும். பிறகு அரைத்த உளுந்தில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், அரிசி மாவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இலை, கருவேப்பிலை, சமையல் சோடா சேர்த்து கலக்கவும்.

  2. 2

    எண்ணெய் சூடு செய்து, ஸ்பூன் சிறிதளவு எடுத்து போடவும். அடுத்தது பத்திரத்தில் 1 லிட்டர் தயிர் அடித்து உப்பு சேர்த்து வைக்கவும். பிறகு சுட்ட வடையை சுடுநீரில் போட்டு, பின் தயிரில் போடவும்.

  3. 3

    அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து,பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை தாளித்த பொருட்களை போட்டு கலக்கவும். 4 மணி நேரம் ஊறவிடவும். கொத்தமல்லில் மற்றும் பூந்தி தூவி பரிமாறவும்.

  4. 4

    தயிர் வடை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes