முருங்கைக் கீரை அடை (murungai Keerai Adai Recipe in tamil)

கவிதா முத்துக்குமாரன்
கவிதா முத்துக்குமாரன் @kavitha1979

முருங்கைக் கீரை அடை (murungai Keerai Adai Recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப்இட்லி அரிசி
  2. 2 கப்பச்சைஅரிசி
  3. 2 கப்கடலைபருப்பு
  4. 1/2 கப்துவரம்பருப்பு
  5. 1/2 கப்உளுந்து பாசிபருப்பு தலா
  6. 10 - 15 காய்ந்த மிளகாய் (காரத்திற்கேற்ப)
  7. 7-8 பல்பூண்டு (தோலுடன்)
  8. 1 ஸ்பூன்சோம்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி தனியாக பருப்பு வகைகளை தனியாக 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய் பூண்டு, சோம்பு போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.....அத்துடன் அரிசியை அரைத்துக் கொண்டு பின்னர் பருப்பு வகைகளை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.....

  3. 3

    வெங்காயம் பொடியாக அரிந்துக் கொள்ளவும்.....தேங்காய் அரைமூடி கீறிக் கொண்டு சிறுபல்லாக வெட்டிக் கொள்ளவும்.

  4. 4

    வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து பெருங்காயம் சிறிது போட்டு வெங்காயம் போட்டு வதக்கி கொள்ளவும்....பின்னர் தேங்காய் போட்டு 2- 3 நிமிடங்கள் வதக்கி ஆற வைத்து மாவில்கொட்டவும்

  5. 5

    2 கைப்பிடி முருங்கை இலையை கழுவி மாவில் போட்டு உப்பு சேர்த்து தோசைக்கல்லில் அடை வார்த்தெடுக்கவும்....நாட்டு சர்க்கரை தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes