கடலைமாவு சாம்பார்

keerthana sivasri
keerthana sivasri @keerthana

#ilovecooking2

ரெடிமேட் சாம்பார் நினைத்தவுடன் செய்து விடலாம். ருசியாக இருக்கும்.

கடலைமாவு சாம்பார்

#ilovecooking2

ரெடிமேட் சாம்பார் நினைத்தவுடன் செய்து விடலாம். ருசியாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 200 கிராம் கடலை மாவு
  2. 2 தக்காளி
  3. 3 பெரிய வெங்காயம்
  4. 2 பச்சை மிளகாய்
  5. சிறிதளவு கறிவேப்பிலை
  6. சிறிதளவு கொத்தமல்லி
  7. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. ஒரு ஸ்பூன் கடுகு
  9. ஒரு ஸ்பூன் சீரகம்
  10. தேவையான அளவு உப்பு
  11. தேவையான அளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    தேவையான பொருளை எடுத்துக்கொண்டு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். காய்ந்தவுடன் கடுகு போடவும்.

  2. 2

    ஒரு ஸ்பூன் சீரகம், சிறிதளவு கருவேப்பிலை, சேர்த்து தாளித்து அதோடு பச்சை மிளகாய் சேர்க்கவும்.

  3. 3

    அதோடு வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

  5. 5

    அடுப்பை குறைவான தீயில் வைத்து, கொதிக்கும் கலவையில் 200 கிராம் கடலை மாவை எடுத்து தண்ணீர் ஊற்றி கட்டி படாமல் கலக்கி அதில் ஊற்றவும்.

  6. 6

    அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவை சாம்பாரை போல் இருக்கும். சுவையான ரெடிமேட் சாம்பார் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
keerthana sivasri
அன்று

Similar Recipes