பிறந்தநாள் கிரீம் கேக்(Birthday cream cake recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

பிறந்தநாள் கிரீம் கேக்(Birthday cream cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி15 நிமிடம்
10 பேருக்கு
  1. கேக் செய்ய:
  2. ஒன்னே கால் கப் மைதா மாவு
  3. முக்கால் கப் சர்க்கரை
  4. ஒரு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  5. ஒரு ஸ்பூன் பேக்கிங்
  6. ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா
  7. கால் ஸ்பூன் உப்பு
  8. கால் கப் வாசமில்லா எண்ணெய்
  9. அரைக் கப் தயிர்
  10. கால் கப் பால்
  11. க்ரீம் செய்ய:
  12. 450 கிராம் வெண்ணெய்
  13. 4 ஸ்பூன் பால்
  14. கால் கப் சர்க்கரை
  15. அரை ஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  16. தேவையானஅளவு பச்சை,நீலம் மற்றும் ரோஸ்ஃபுட் கலர்
  17. அலங்கரிக்க:
  18. தேவையானஅளவு கலர் சர்க்கரை துகள்கள்
  19. சிறிதளவுசெர்ரி பழங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி15 நிமிடம்
  1. 1

    மைதா மாவு,பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா மற்றும் உப்பு ஆகியவற்றை சலித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு மிக்ஸிங் பவுலில் தயிர், சர்க்கரை மற்றும் எண்ணை சேர்த்து நன்றாக கலந்து பீட் செய்து கொள்ளவும். அதனுடன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும்.

  3. 3

    பிறகு இந்த கலவையுடன் சலித்து வைத்துள்ள மைதா மாவு கலவையை சேர்த்து நன்றாக கரண்டியால் ஒருபுறமாக கலக்கி, அனைத்தும் நன்கு சேரும்படி கலந்து விடவும்.

  4. 4

    பேக்கிங் டின்னில் வெண்ணெய் தடவி தயார் செய்து வைத்துள்ள மாவு கலவையை சேர்த்து இரண்டு முறை டின்னை தட்டி இதனை 180 டிகிரி பிரீ ஹீட் செய்த மைக்ரோவேவ் அவனில் 20 நிமிடம் பேக்கிங் டைம் செட் செய்து வைக்கவும்.

  5. 5

    மைக்ரோவேவ் அவன் நின்ற பிறகு 5 நிமிடம் கழித்து வெளியே எடுத்து கேக்கை ஒரு கிச்சன் டவல் போட்டு மூடி விடவும்.

  6. 6

    க்ரீம் செய்ய ஒரு பவுலில் வெண்ணை சேர்த்து அது நன்கு க்ரீம் ஆகும் வரை 5 நிமிடம்வரை பீட் செய்து கொள்ளவும். பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். பிறகு இந்த கலவையை நன்றாக பீட் செய்த வெண்ணெய் கலவையுடன் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் நன்றாக பீட் செய்யவும்.

  7. 7

    பிறகு பீட் செய்த க்ரீமை தேவையான அளவு எடுத்து தேவையான கலர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

  8. 8

    பேக் செய்து வைத்துள்ள கேக்கின் மேல் கலர் சேர்க்காத கிரீமை சேர்த்து முழுவதுமாக தேய்த்து பிறகு மேலே தேவையான வடிவில் பூ மற்றும் இலை போடவும். மேலே சிறிது கலர் சர்க்கரைத் துகள்களை தூவி அலங்கரிக்கவும். அதன்மேல் தேவையான இடங்களில் செர்ரி பழத்தை சேர்க்கவும்.

  9. 9

    இப்பொழுது அருமையான சுவையான பிறந்தநாள் கிரீம் கேக் தயார் 😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Top Search in

Similar Recipes