ரசமலாய் கேக் (Rasmalai Cake recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

ரசமலாய் கேக் (Rasmalai Cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

இரண்டு மணிநேரம்
  1. 2கப் மைதா மாவு
  2. 2டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  3. 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  4. 3/4 கப் உருகிய வெண்ணெய்
  5. 1கப் தயிர்
  6. 1கப் சர்க்கரை
  7. 1/2கப் பால்
  8. 1/2 டீஸ்பூன் வெனிலா எசென்ஸ்
  9. 2சொட்டு மஞ்சள் ஜெல் கலர்
  10. 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  11. கொஞ்சம்குங்குமப்பூ
  12. ரசமலாய் செய்ய :
  13. 2லிட்டர் பால்
  14. 1/2 கப் மிக்ஸட் நட்ஸ்
  15. ரசமலாய் உருண்டைகள் செய்ய:
  16. 2லிட்டர் பால்
  17. 2டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  18. 1 லிட்டர் தண்ணீர்
  19. 1 கப் சர்க்கரை
  20. ரசமலாய் கிரீம் செய்ய :
  21. 2கப் விப்பிங் கிரீம்
  22. 1/2 டீஸ்பூன் வெனிலா எசென்ஸ்
  23. கேக் அலங்கரிக்க :
  24. செர்ரி
  25. சிகப்பு ரோஸ் பூ

சமையல் குறிப்புகள்

இரண்டு மணிநேரம்
  1. 1

    ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு லிட்டர் பால் சேர்த்து பாதி ஆகும் வரை காய்ச்சவும். பின்னர் அதில் ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து கலந்து வைக்கவும்.

  2. 2

    நன்கு கலந்து இரண்டு சொட்டு மஞ்சள் கலர், நட்ஸ் சேர்த்து கலந்து இறக்கினால் ரசமலாய் தயார்.

  3. 3

    மேலும் இரண்டு லிட்டர் பாலை காய்ச்சி, பொங்கி வரும் போது ஸ்டவ்வை ஆப் செய்து விட்டு, அதில் எலுமிச்சை சாறு பிழிந்து, பால் திரிந்ததும் எடுத்து,ஒரு துணியில் ஊற்றி பிழிந்து பன்னீர் தயார் செய்யவும்.

  4. 4

    பின்னர் அந்த பன்னீரை ஒரு தட்டில் சேர்த்து நன்கு கையை வைத்து அழுத்தி தேய்த்து மிருதுவானதும் உருட்டி, ரசமலாய் உருண்டைகள் தயார் செய்யவும்.

  5. 5

    தயாரான உருண்டைகளை, ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி, ஒரு கப் சர்க்கரையை சேர்த்து கொதிக்கவிடவும். சர்க்கரை நன்கு கரையும் வரை கலந்து விடவும்.

  6. 6

    உருண்டைகள் வெந்து இரண்டு மடங்கு பெரியதாகி மேலே வரும் போது எடுத்து கையில் வைத்து அழுத்தி தண்ணீரை பிழிந்து விட்டு தயார் செய்து வைத்துள்ள ரசமலாயில் சேர்க்கவும்

  7. 7

    கேக் செய்ய தேவையான மைதா, தயிர், பேக்கிங் சோடா, சர்க்கரை, உருக்கிய வெண்ணெய், பேக்கிங் பவுடர், பால் எல்லாம் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

  8. 8

    ஒரு பௌலில் தயிர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து மூடி வைக்கவும். அது நன்கு பொங்கி வரும்.

  9. 9

    வேறு ஒரு பௌலில் உருக்கிய வெண்ணெய், மற்றும் சர்க்கரை சேர்த்து பீட் செய்யவும்.

  10. 10

    பின்னர் வெண்ணெய், சர்க்கரை கலவையில் முதலில் தயார் சேத்து வைத்துள்ள தயிர் கலவையை சேர்த்து கலக்கவும்.

  11. 11

    பின்பு சலித்து வைத்துள்ள மைதா பேக்கிங் பவுடர் கலவையை சேர்க்கவும். அத்துடன் கொஞ்சம் ரசமலாய் கலவையை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

  12. 12

    பின்னர் பேக்கிங் டின்னை தயார் செய்து கேக் கலவையை ஊற்றவும். பின்னர் 180 டிகிரியில் பதினைந்து நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்த மைக்ரோ வேவ் ஓவனில் நற்பத்தி எட்டு நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் ரசமலை கேக் செய்ய கேக் தயார்.

  13. 13

    கேக் நன்கு சூடு ஆறியவுடன் கேக் கட்டிங் டூல்ஸ் வைத்து மூன்று அடுக்குகளாக கட் செய்யவும்.

  14. 14

    தயார் செய்து வைத்துள்ள ரசமலாய் கிரீம், ரசமலாய் பால் கலவை, ரசமலாய் உருண்டைகள் சேர்த்த ரசமலாய் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.

  15. 15

    கேக் நன்கு ஆறியவுடன் ஓவொரு கேக் லேயரிலும் முதலில் ரசமலாய் பால் ஊற்றி கேக் முழுதும் பரப்பி விடவும். பின்னர் ரசமலாய் கிரீம், பின்னர் நட்ஸ் தூவவும். அதே போல் மூன்று லேயரிலும் செய்யவும்.

  16. 16

    கடைசியாக கேக் முழுவதும் கிரீம் தடவி, ரசமலாய் உருண்டைகளை வைத்து, மலாய் பாலை ஊற்றி, நட்ஸ் தூவி அலங்கரிக்கவும். நடுவில் ஒரு செர்ரியை வைத்து, கேக் முழுவதும் நட்ஸ் தூவி, ஓரங்களில் சிவப்பு ரோஸ் இதல்களை வைத்து அலங்காரித்தால் ரசமலாய் கேக் தயார். தயாரான கேக்கை எடுத்தது ஒரு தட்டில் வைக்கவும்.

  17. 17

    தட்டில் வைத்துள்ள கேக்கை விருப்பப்படி கட் செய்து வைத்தால் மிக மிக சுவையான ஸ்பாஞ்சி ரசமலாய் கேக் சுவைக்கத் தயார்.

  18. 18

    இந்த ரசமலாய் கேக் செய்வதற்கு நிறைய டைம் எடுக்கும். ஆனால் சுவையோ அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes