வரகு அரிசி வெண்பொங்கல்(varagu arisi venpongal recipe in tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#CF1
ஈசியான முறையில் சுலபமாக செய்யக்கூடிய சாதம்.வரகு அரிசி சர்க்கரையின் அளவை சம நிலையில் வைத்திருக்கும்,உடலில் கொழுப்பைக் கரைக்கும்.

வரகு அரிசி வெண்பொங்கல்(varagu arisi venpongal recipe in tamil)

#CF1
ஈசியான முறையில் சுலபமாக செய்யக்கூடிய சாதம்.வரகு அரிசி சர்க்கரையின் அளவை சம நிலையில் வைத்திருக்கும்,உடலில் கொழுப்பைக் கரைக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 கப் வரகு அரிசி
  2. 1/4 கப் பாசிப் பருப்பு
  3. 2 ஸ்பூன் நெய்
  4. 1 ஸ்பூன் சீரகம்
  5. 1 ஸ்பூன் மிளகு
  6. 2 மிளகாய்
  7. தேவையானஅளவு கருவேப்பிள்ளை
  8. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான அளவு பாசிப்பருப்பை மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்.தேவையான அளவு வரகு அரிசியை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.குக்கரை எடுத்துக்கொள்ளவும்.

  3. 3

    2 ஸ்பூன் நெய் விட்டு 1 ஸ்பூன் சீரகம்,1 ஸ்பூன் மிளகு சேர்க்கவும்.

  4. 4

    சிறிதளவு கருவேப்பில்லை, பச்சமிளகாய்,இஞ்சி சேர்த்து வதக்கவும்.

  5. 5

    தேவைப்பட்டால் சிறிதளவு முந்திரிப் பருப்பு சேர்த்துக் கொள்ளலாம்,நன்றாக வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

  6. 6

    தண்ணீர் கொதிக்கவும்,உப்பு சேர்த்து வரகு அரிசி சேர்த்து குக்கரை மூடவும், 5 வீசில் விடவும்.

  7. 7

    சுவையான வரகு அரிசி பொங்கல் தயார்,சட்னி,சாம்பார் வைத்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

Similar Recipes