தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

மிகவும் எளிமையான ரெசிபி சளிக்கு மிகவும் நல்லது

தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)

மிகவும் எளிமையான ரெசிபி சளிக்கு மிகவும் நல்லது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
6 பேர்
  1. 8 பல் பூண்டு
  2. 2 மேஜை கரண்டி குறுமிளகு
  3. 2 மேஜை கரண்டி சீரகம்
  4. 2 வர மிளகாய்
  5. 6 தக்காளி
  6. தேவையானஅளவு கறிவேப்பிலை
  7. தேவையானஅளவு கொத்தமல்லி
  8. 1/2நெல்லிக்காய் புளி
  9. 1 மேஜை கரண்டி ரசம் ரசப்பொடி
  10. 1 மேஜை கரண்டி எண்ணெய்
  11. 1 தேக்கரண்டி கடுகு
  12. 1/2 மேஜை கரண்டி மஞ்சள்
  13. 2 மேஜை கரண்டி உப்பு
  14. 1/2 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் குறு மிளகு, சீரகம், பூண்டு, வர மிளகாய் அனைத்தையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பின்னர் இன்னொரு மிக்ஸியில் தக்காளி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும். பின்பு குறுமிளகு பூண்டு அரைத்த கலவையை போட்டு பச்சை வாசனை போகும் வரை தாளித்துக் கொள்ளவும்.

  4. 4

    பின்பு அதில் தக்காளி, கரைத்த புளி மற்றும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து கொதி வந்தவுடன் கொத்தமல்லியை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுடச்சுட பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes