ரோட்டுக்கடை மீல் மேக்கர் (சோயா)(roadside soya masala recipe in tamil)

ரோட்டுக்கடை மீல் மேக்கர் (சோயா)(roadside soya masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீள்மேக்கரை கழுவி வைத்துக் கொள்ளவும்
- 2
இரண்டு முறை கழுவிய மீல் மேக்கரை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து இரண்டு நிமிடம் உப்பு சேர்த்து வேக விடவும்
- 3
மீல்மேக்கர் வெந்த பிறகு அதை மறுபடியும் இரண்டு முறை குளிர்ந்த நீரில் நன்கு அலசி வடிகட்டி பிழிந்து. அதனுடன் சிக்கன் மசாலா,சோள மாவு மற்றும் மைதா மாவு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 4
அனைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து கலக்கவும்.
- 5
நன்கு காய்ந்த எண்ணெயில் மிதமான தீயில் சிறிது சிறிதாக பொரித்து மொறு மொறு என்று எடுக்கவும்.
- 6
சாஸ் செய்ய தக்காளி வரமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அதில் அரைத்த விழுதை சேர்த்து அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்
- 7
இப்பொழுது இதில் இரண்டு ஸ்பூன் சோளமாவை தண்ணீரில் நன்கு கரைத்து இதனுடன் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கவும்
- 8
ரோட்டு கடை ஸ்டைலில், ஒரு பவுலில் நாம் தயாரித்த சாஸ் சேர்த்து அதன் மேல் பொறித்த சோள உருண்டைகளை சேர்த்து அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்துமல்லி இலைகள் தூவி மிளகுத்தூள் அல்லது சாட் மசாலா தூவி பரிமாறினால் அருமையான சுவையான ரோட்டுக்கடை மீல்மேக்கர் தயார் 😋😋😋
- 9
குறிப்பு
அவரவர் விருப்பத்திற்கு க்கேற்ப பச்சை மிளகாய் அல்லது வரமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)
ரோட் கடை காளான் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் புட் ஆகும்.#thechefstory #ATW1 Meenakshi Maheswaran -
-
-
சோயா சங்ஸ் பெப்பர் ப்ரை (Soya chunks pepper fry Recipe in Tamil)
#nutrient3 #book Vidhyashree Manoharan -
மீல் மேக்கர் பெப்பர் ப்ரை
#pms family வணக்கம் நன்பர்களே நலமா அனைவரும் .மீல் மேக்கர் பெப்பர் கிரேவி கடாயில் எண்ணெய் ஊற்றவும் காய்ந்ததும் சிருஞ் சீரகம் பெருஞ்சீரகம் சேர்கவும் பிறகு தேவையான அளவு வெங்காயம் சேர்ககவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதகவும் பிறக தக்காளி சேர்த்து மஞ்சள் மிளகாய் கரம் மசாலா மல்லி ஆகிய தூள்களை தேவையான அளவு சேர்க்கவும்.பிறகு மீல் மேக்கரை சேர்த்து நீர் ஊற்றி வேக விடவும்.இறுதியாக மிளகு தூள் சேர்த்து இறக்கினால் கம கம #pms family ooda Meel maker pepper fry ready 😊☺️👍 Anitha Pranow -
-
-
-
-
-
-
-
-
-
-
மீல் மேக்கர் கிரேவி🍲🍲 (Meal maker gravy Recipe in Tamil)
#Nutrient 3 புரதம் நிறைந்த மீல் மேக்கரில் அதே அளவு நார்ச் சத்தும் இரும்புச் சத்தும் நிறைந்திருக்கிறது மற்றும் எல்லாவிதமான விட்டமின்களும் இருக்கிறது. Hema Sengottuvelu -
மீல் மேக்கர் கிரேவி
# PT#weightloss gravyஇது புரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரேவி செய்து சாப்பிடலாம். ஆரோக்கியம் மற்றும் வயிறும் நிரம்பும். Ananthi @ Crazy Cookie -
-
-
மீல் மேக்கர் மிளகு வறுவல்👌👌👌👌👌 SOYA
#PMSFAMILY. மீல் மேக்கர் மிளகு வறுவலை 👍 மட்டன்ஈரல் வறுவல் போல் சூப்பராக 👌செய்ய முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு இருபது நிமிடம் ஊற வைத்து அதை நன்கு பிழிந்து எடுத்து மீண்டும் தண்ணீரில் அலசி அலசி சுத்தமாக தண்ணீரை பிழிந்து எடுத்து கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சோம்பு தாளித்து கறிவேப்பிலை வரமிளகாய் கிள்ளி போட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசன போனவுடன் நறுக்கிய தக்காளி மசிய வதக்கி மஞசள்தூள் மல்லிதூள் வரமிளகாய்தூள் கரம் மசால் கலந்து சுத்தம் செய்த சோயா உப்பு சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விட்டு. தண்ணீர் சுண்டியவுடன் மிளகுதூள் சேர்த்து பிரட்டி ஆயில் சிறிது ஊற்றி ஒரு நிமிடம் கழித்து துருவிய தேங்காய் துருவல் கலந்து மட்டனை போல் மணக்கும் சோயா மீல் மேக்கர் சூப்பர்👌👌👌👌👌 Kalavathi Jayabal -
சோயா பட்டாணி சப்ஜி (Soya battani sabji recipe in tamil)
#nutrient3சோயாவில் 80% இரும்பு சத்தும், 36% நார் சத்தும் உள்ளது.பச்சை பட்டாணியில் அதிக அளவு நார் சத்து உள்ளது.இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். காரம் வேண்டுமெனில் மிளகாய் தூள் சேர்ப்பதை தவிர்க்கலாம். நான் சிறிய மீல் மேக்கர் பயன் படுத்தி உள்ளேன் நீங்கள் பெரிய சைஸ் மீல் மேக்கர் உள்ளது எனில் அதை 2 ஆக தட்டி பயன் படுத்தவும். Manjula Sivakumar -
-
-
-
மொறு மொறு எக் பிங்கர்(egg finger recipe in tamil)
#FCபொதுவாக குழந்தைகளுக்கு முட்டை மிகவும் பிடிக்கும். மேலும் இது போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். Gowri's kitchen -
-
More Recipes
கமெண்ட் (4)