பரோட்டா(parotta recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#Ib

பரோட்டா(parotta recipe in tamil)

#Ib

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1/2 கிலோ மைதா
  2. 3/4 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  3. 1_1/2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  4. 100 மில்லி சூடான பால்
  5. 50 மில்லி உருக்கிய வனஸ்பதி
  6. தேவையான அளவுஉப்பு
  7. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    மைதா உடன் உப்பு பேக்கிங் பவுடர் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  2. 2

    பின் உருக்கிய வனஸ்பதி சேர்த்து நன்கு பிசிறி விடவும் பின் சூடான பாலை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும் பின் தேவையான அளவு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்

  3. 3

    பின் அதன் மேல் எண்ணெய் தடவி இரண்டு மணிநேரம் வரை ஊறவிடவும் பின் நன்கு பிசைந்து கொள்ளவும்

  4. 4

    பின் சற்று பெரிய உருண்டைகளாக உருட்டி மேலே எண்ணெய் தடவி ஈரத்துணி கொண்டு சுற்றி ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் வரமாவில் புரட்டி மெல்லியதாக தேய்க்கவும் பின் இதை புடவை கொசுவம் போல் சுருட்டி கொள்ளவும்

  5. 5

    பின் இதை மிகவும் அழுத்தம் கொடுக்காமல் மிருதுவாக தேய்த்து கொள்ளவும்

  6. 6

    பின்சூடான தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு மெல்லிய தீயில் சுட்டெடுக்கவும் சுவையான ஆரோக்கியமான பரோட்டா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes