மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
#Cf9

மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)

மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
#Cf9

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. 1/2 கப் மைதா மாவு
  2. 1/4கப் சர்க்கரை
  3. 1/4 கப் உருக்கிய வெண்ணெய்
  4. 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. ஒரு சொட்டு மஞ்சள் கலர்
  6. 2டேபிள் ஸ்பூன் பால்
  7. 1/2 டீஸ்பூன் வெனிலா எசென்ஸ்
  8. 2 டேபிள் ஸ்பூன் மிஸ்டு நட்ஸ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மைதா மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    பின்னர் ஒரு பௌலில் உருக்கிய வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்கு பீட் செய்யவும்.

  3. 3

    பின்னர் சலித்து வைத்துள்ள மாவு, மஞ்சள் கலர், வெனிலா எசென்ஸ், பால் சேர்த்து நன்கு கலக்கவும்.

  4. 4

    பின்னர் எடுத்து கப் கேக் மோல்டில் சேர்த்து, பொடியாக நறுக்கிய நட்ஸ் தூவி தயாராக வைக்கவும்.

  5. 5

    பின்னர் மைக்ரோ வாவ் ஓவனில் 170டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து பனிரெண்டு நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் மினி நட்ஸ் கப் கேக் தயார்.

  6. 6

    தயாரான மினி நட்ஸ் கப் கேக்ஸ்ஐ எடுத்து பரிமாறும் தட்டில் வைத்து சுவைக்கவும்.

  7. 7

    இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சுவைத்து மகிழ்வார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes