ஆம்லெட் ரைஸ்

parvathi b
parvathi b @cook_0606
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் வெந்த பாஸ்மதி அரிசி
  2. 1 வெங்காய தாள்
  3. 1 சிறிய கேரட்
  4. 3 பீன்ஸ்
  5. 1 குடை மிளகாய்
  6. 1 பெரிய வெங்காயம்
  7. 2 டீஸ்பூன் மிளகு நுணுக்கியது
  8. 2 டீஸ்பூன் கரம் மசாலா போடி
  9. கருவேப்பிலை
  10. 1 டீஸ்பூன் சர்க்கரை
  11. 1 முட்டை
  12. டொமட்டோ கேட்ச்அப்
  13. தேவையான அளவு உப்பு
  14. 2 பல் பூண்டு
  15. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கேரட், பீன்ஸ், வெங்காய தாள் ஆகியவற்றை பொடி பொடியாக அறிந்து கொள்ளவும்

  2. 2

    பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் அறிந்து கொள்ளவும், பூண்டை சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

  3. 3

    1 டீஸ்பூன் சர்க்கரை முட்டையை நன்றாக அடித்து வைத்து கொள்ளவும்.

  4. 4

    ஒரு வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் பூண்டு சேர்த்து வெங்காயம்,கறிவேப்பிலை,கேரட், பீன்ஸ், வெங்காய தாள் சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    பின்னர் அதில் வேக வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து உப்பு, மிளகு தூள் மற்றும் கரம் மசாலா பொடி சேர்த்து நன்கு கிளறி எடுத்து வைக்கவும்.

  6. 6

    தோசை கல்லில் அடித்து வைத்த முட்டையை ஆம்லெட் போட்டு வைக்கவும்.

  7. 7

    ஆம்லெட்டை ஒரு தட்டில் வைத்து அதன் நடுவில் நாம் தயாரித்து வைத்த ஃபிரைடு ரைஸ் வைத்து அதை நன்கு பாக்கவும் மூடி,திருப்பி வைத்து, அதன் மேல் டொமட்டோ கேட்ச்அப் வைத்து பரிமாறவும்.

  8. 8

    சுவையான ஆம்லெட் ரைஸ் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

parvathi b
parvathi b @cook_0606
அன்று
Home maker , passionate about cooking
மேலும் படிக்க

Similar Recipes

More Recommended Recipes