சிக்கன் நகட்ஸ்

Navas Banu
Navas Banu @cook_17950579

சிக்கன் நகட்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250 கிராம்முள்ளில்லாத சிக்கன்
  2. 3 அல்லிபூண்டு
  3. 1 டேபிள் ஸ்பூண்பெப்பர் பொடி
  4. தேவைக்குஉப்பு
  5. 2 டேபிள் ஸ்பூண்மைதா மாவு
  6. 2 டேபிள் ஸ்பூண்கார்ன் ஃப்ளோர்
  7. 2முட்டை
  8. 1 கப்பிரெட் கிரம்ப்ஸ்
  9. பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மிக்ஸி ஜாரில் சிக்கன் துண்டுகள், பூண்டு, பெப்பர் பொடி,தேவைக்கு உப்பும் சேர்த்து வடிய அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    இதை ஒரு பவுளில் மாற்றவும். இதனுடன் 2 டேபிள் ஸ்பூண் மைதா மாவு சேர்த்து நன்றாகக் குழைத்து எடுக்கவும்.

  3. 3

    முட்டையின் மஞ்சள் கருவை மாற்றி விட்டு வெள்ளைக் கருவை நன்றாக அடித்துக் கொள்ளவும்.

  4. 4

    குழைத்த சிக்கனை விரும்பும் வடிவங்களில் தட்டி எடுக்கவும்.

  5. 5

    இதனை கார்ன் ஃப்ளோரில் இரு புறமும் புரட்டி எடுக்கவும்.

  6. 6

    ஒரு கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், கார்ன் ஃப்ளோரில் புரட்டி வைத்த நகட்ஸை, அடித்து வைத்திருக்கும் முட்டையின் வெள்ளைக் கருவில் முக்கி, பிரெட் க்ரம்ப்ஸில் நன்றாக புரட்டி எடுத்து எண்ணெயில் போடவும்.

  7. 7

    மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். கோல்டன் ப்ரவுன் கலரில் வரும் போது எண்ணெயில் இருந்து கோரி எடுக்கவும்.

  8. 8

    சுவையான சிக்கன் நகட்ஸ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes