மட்டன் கொத்து கறி வடை

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

மட்டன் கொத்து கறி வடை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

6 பரிமாறுவது
  1. 1/4 கிலோ எலும்பில்லாத மட்டன்
  2. 1 கப் சின்ன வெங்காயம்
  3. 1 கப் சின்ன வெங்காயம்
  4. சிறிதுகறிவேப்பிலை
  5. சிறிதுகொத்தமல்லி தழை
  6. 100 கிராம் பட்டாணி பருப்பு
  7. பொரிப்பதற்குஎண்ணெய்
  8. தேவையான அளவுஉப்பு
  9. அரைக்க
  10. 1 துண்டு இஞ்சி
  11. 10 பல் பூண்டு
  12. 1 ஸ்பூன் சோம்பு
  13. 2 ஸ்பூன் சீரகம்
  14. 2 ஸ்பூன் மல்லி விதை
  15. 6 வரமிளகாய்
  16. 2 பட்டை
  17. 2 கிராம்பு
  18. 2 ஏலக்காய்
  19. 1 மராத்தி மொக்கு
  20. 1 அன்னாச்சி பூ

சமையல் குறிப்புகள்

  1. 1

    பட்டாணி பருப்பை இரண்டு மணி நேரம் வரை ஊறவிடவும்

  2. 2

    பின் கரகரப்பாக அரைத்து எடுக்கவும்

  3. 3

    மட்டனை சுத்தம் செய்து அலசி மிக்ஸியில் போட்டு விப்பர் பட்டனில் போட்டு இரண்டு சுற்று சுற்றி உதிரியாக எடுத்து வைக்கவும்

  4. 4

    மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் இஞ்சி பூண்டு தவிர மீதமுள்ள பொருளை தனித்தனியாக வெறும் வாணலியில் போட்டு வறுத்து ஆறவிடவும்

  5. 5

    பின் இஞ்சி பூண்டு உடன் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்

  6. 6

    பின் அகலமான பாத்திரத்தில் முதலில் மட்டன் கொத்து கறி ஐ போடவும்

  7. 7

    பின் கரகரப்பாக அரைத்து வைத்துள்ள பட்டாணி பருப்பை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  8. 8

    பின் கரகரப்பாக அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  9. 9

    பின் கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தழை மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

  10. 10

    பின் சின்ன சின்ன வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  11. 11

    இந்த வடையை சூடாக தேங்காய் சட்னி உடன் பரிமாற நன்றாக இருக்கும் மொறுமொறுப்பாக நன்றாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes