சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அடி கனமான வாணலியில், பாசிபயிறை சேர்த்து அதை நன்கு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
- 2
பின்னர் வேறொரு வாணலியை எடுத்து கொண்டு அதில் சிறிதளவு நெய் ஊற்றி, முந்திரி, ஏலக்காய் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். பிறகு அதில் தேங்காய் துருவலை சேர்த்து லேசாக வறுக்கவும்
- 3
ஏலக்காய், ஒரு தேக்கரண்டி சர்க்கரை, முந்திரி பருப்பு. இவை மூன்றையும் மிக்ஸியில் நன்றாக பொடித்து கொள்ளவும்.
- 4
பின்னர் வறுத்து வைத்திருக்கும் பாசிபயிறை பொடித்து நன்றாக சலித்து கொள்ளவும்.
- 5
வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து, வடிகட்டி, கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
- 6
பாகு கம்பி பதம் வந்தவுடன் அதே சூட்டில் இருக்கும் போதே பாசிபயிறு மாவை அதில் கொட்டி கட்டியில்லாமல் கிளறவும்
- 7
அதில் தேங்காய் துருவல், முந்திரி, ஏலக்காய், இவை மூன்றையும் போட்டு நன்கு கிளறவும்.
- 8
கிளறி வைத்திருக்கும் மாவை சிறி சிறு உருண்டைகளாக (அரைநெல்லி அளவு) உருட்டி ஒரு தட்டில் வைக்கவும்.
- 9
அதன் பின் மேல் மாவிற்கு தேவையான மைதா மாவையும், அரிசி மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கட்டியிலாமல் கரைக்கவும்.
- 10
3 உருண்டைகளாக சேர்த்து முக்கோன வடிவில் எடுத்து கொள்ளவும்.
- 11
அதன் பின்னர் கரைத்து வைத்திருக்கும் மாவில் உருண்டைகளை தோய்த்து எடுக்கவும்.
- 12
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவில் தோய்த்து எடுத்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
Similar Recipes
More Recipes




கமெண்ட்