பொட்டுக்கடலை சாதம்                     

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

உடைத்த கடலை பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது. நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிதளவு சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். உடலில் நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. பொட்டுக்கடலை - 1 கப்
  2. சாதம் - 1 கப்
  3. காய்ந்த மிளகாய் - 4
  4. கடுகு - 1/4 ஸ்பூன்
  5. கருவேப்பில்லை - சிறிது
  6. வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
  7. உப்பு - சிறிது
  8. எண்ணெய் - சிறிது

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு, காய்ந்தமிளகாய், கருவேப்பில்லை சேர்த்து தாளித்து பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கியவுடன் வடித்த சாதம் அல்லது மிஞ்சிய சாதம் (முதல் நாள் சாதம்) சேர்த்து அதனுடன் பொட்டுக் கடலை மாவு தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும் விரும்பினால் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து பறிமாறலாம்.

  2. 2

    (இச்சாததை காலையில் சமைத்து மத்தியம் சாப்பிட சுவை கூடும்) குழந்தைகளுக்கு ஏற்ற உடனடி சாதம். சுவை மற்றும் சத்து நிறைந்தது.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manjula Sivakumar
அன்று

Similar Recipes