தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. வெண்டைக்காய்-250 கிராம்
  2. வெங்காயம்-2(பொடியாக நறுக்கவும்)
  3. தக்காளி-2(பொடியாக நறுக்கவும்)
  4. பச்சை மிளகாய்-1
  5. மிளகாய் தூள்-2 டீஸ்பூன்
  6. மல்லி தூள்-1 டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
  8. சீரக தூள்-1/2 டீஸ்பூன்
  9. தயிர்-1/2 கப்
  10. தண்ணீர்-1/2 கப்
  11. பட்டை-சிறிய துண்டு
  12. பிரிஞ்சி இலை-1
  13. இஞ்சி-2 டேபிள் ஸ்பூன்(பொடியாக நறுக்கவும்)
  14. பூண்டு-2 டேபிள் ஸ்பூன்
  15. உப்பு-தேவைக்கேற்ப
  16. எண்ணெய்-தேவைக்கேற்ப
  17. மல்லி தழை-சிறிதளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வெண்டைக்காயை கழுவி,துடைத்து பின் எண்ணெயில் பொரித்த எடுக்கவும்.

  2. 2

    பின் அதே கடாயில் பட்டை, பிரிஞ்சி இலை,பச்சை மிளகாய்,இஞ்சி,பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரக தூள்,மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.

  5. 5

    பின் தயிரை தண்ணீர் சேர்த்து கலந்து அதில் ஊற்றவும்.

  6. 6

    பின்பு பொரித்த வெண்டைக்காயை அதில் சேர்த்து கிளறி,மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.

  7. 7

    கடைசியில் மல்லி தழை தூவி இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes