பனை ஓலை கொழுக்கட்டை

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#மகளிர
மகளிர் தினத்திற்காக எனக்காக நானே சமைக்க வேண்டும் என்ற ஒரு கட்டத்தில் என்ன சமைப்பது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டே வண்டியில் வந்து கொண்டிருந்தேன் அப்பொழுது நுங்கு பனை ஓலை உடன் விற்றுக் கொண்டிருந்தது பதினைந்து இருபது ஆண்டுகளுபின் திடீரென்று பனை ஓலை கொழுக்கட்டை செய்யலாம் என்று தோன்றியது. எனக்கு இயற்கை சார்ந்த உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் ஆவியில் வேகவைத்த உணவு மிகவும் பிடிக்கும் வாழ்க்கையில் பெண்கள் தனக்காக எதையுமே செய்து கொள்வது இல்லை என்று மகளிர் தினத்தன்று நம் குழுவில் இப்படி ஒரு தலைப்பை கொடுத்தது என்னை பிரமிக்க வைத்ததுடன் கண்களில கண்ணீர் கலங்கின. உடனே பனைஓலை நுங்கு இரண்டுமே வாங்கிவிட்டேன். கொழுக்கட்டை செய்துவிட்டேன்.. தலைமுறைகள் மறந்துபோன இந்தக் கொழுக்கட்டை மிகவும் சூப்பராக இருந்தது என்று என் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

நான்கு பேருக்கு
  1. சிவப்பு அரிசி கால் கிலோ
  2. நாட்டுச் சர்க்கரை 200 கிராம்
  3. பாசிப்பருப்பு 100 கிராம்
  4. தேங்காய்த்துருவல் ஒரு கப்
  5. ஏலக்காய் தூள் கால் ஸ்பூன்
  6. உப்பு கால் ஸ்பூன்
  7. பனை ஓலை கட் செய்தது 20 பீஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சிவப்பு அரிசியை வறுத்து பொரிய ஆரம்பிக்கும் முன் இறக்கி விடவும். பாசிப்பருப்பை தனியாக பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.அரிசியை நைஸ் சாகவும் பாசிப் பருப்பை ஒன்றிரண்டாக உடைத்து ஒரு பவுலில் வைக்கவும்.

  2. 2

    இப்பொழுது இந்த மாவுடன் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர்0 புட்டு மாவு பதத்திற்கு கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    நாட்டுச் சர்க்கரை நாலு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து காரைவிட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கிளறவும்.

  4. 4

    நன்றாக கிளறி கெட்டி பதம் வரவும் மாவுடன் சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும். பனை ஓலையை தண்ணீரில் கண்டிப்பாக கழுவக்கூடாது. கழுவினாள் கொழுக்கட்டை நீர்த்துப்போகும்.

  5. 5

    இப்பொழுது நறுக்கி வைத்த பனை ஓலையை நன்கு துணியால் துடைத்துவிட்டு அவற்றில் பிசைந்து வைத்த கொழுக்கட்டை மாவை உள்ளே அடைத்து அதன் மேல் இன்னொரு ஓலையை எதிர் திசையில் சொருகி இட்லி தட்டில் அடுக்கவும்

  6. 6

    இவ்வாறாக பனை ஓலையில் ஒரு பனை ஓலையில் மாவை வைத்து மற்றொரு பனை ஓலையால் மூடி 15 நிமிடம் வேக வைக்கவும். இப்பொழுது பனை ஓலையின் மணத்துடன் சுவையான சூப்பரான பாரம்பரியம் மிக்க பனை ஓலை கொழுக்கட்டை தயார். இப்பொழுது ஓலையிலிருந்து கொழுக்கட்டையை எடுத்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes