சக்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா

சத்து, மணம், நிறம், ருசி –இந்த நான்கும் ஏராளமாக சக்கரை வள்ளிக்கிழங்கில் உள்ளன. பல உணவு ரெஸிபிகளில் இதை சேர்ப்பேன். கோதுமையில் உள்ள குளுடென்(gluten) சில மனிதர்களுக்கு அலர்ஜி தரும். அவர்கள் குளுடென் நீக்கிய பொருட்களை பயன்படுத்துவது நல்லது. விலை சிறிது அதிகமாக இருந்தாலும் குளுடென் நீக்கிய கோதுமை வாங்குவது நல்லது. கோதுமையுடன் ஸ்பெல்ட் (spelt), தேங்காய் மாவுகளையும் சேர்த்து கொண்டேன். எப்பொழுதும் பூச்சி மருந்து உபயோகிக்காமல் பயிரிடப்பட்ட தனியங்களையும், காய்கறிகளையும் உபயோகிப்பேன். இந்தியாவில் எல்லா பொருட்களும் கிடைக்கின்றன. மாவு பிசைய நான் எப்பொழுதும் தயிர் பயன்படுத்துவேன், மாவில் உப்பு சேர்ப்பதில்லை. மாவை நன்றாக பிசைந்து ஒரு ஈற துணியால் முடி 15-30 நிமிடங்கள் ஆற (rest) வைத்தேன். முக்கால் வேக வைத்த சக்கரை வள்ளி கிழங்கை தோலை நீக்கி, ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சின்ன சின்ன உருண்டைகள் செய்தேன், பரோட்டா மாவை நன்றாக கையால் பிசைந்து ஒரு எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்தேன். சிறிது கோதுமை மாவை கல்லில் மேல் துவி உருண்டையை சப்பாத்தி குழவியால் வட்டமாக தேய்த்து கொண்டேன். வள்ளி கிழங்கு உருண்டையை நடுவில் வைத்து, அதன் மேல் சிறிது மாவு தூவி பரோட்டாவை (புகைபடத்தில் இருப்பது போல) மூடினேன். மிகவும் ஜாக்கிரத்தையோடு பில்லிங்(filling) பிதுங்காமல் தேய்க்க வேண்டும். ரொம்ப மெல்லியதாக இருக்க தேவையில்லை. மிதமான நெருப்பின் மேல் தோசைக் கல்லை வைத்து உருகிய வெண்ணை தடவி பரோட்டவின் இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவைத்தேன். பரோட்டாவுடன் விருப்பமான காய்கறி பொரியல், கூட்டு, சட்னி, ஊறுகாய், தயிர் எதுவேண்டுமானாலும் சேர்த்து காலை, மதியம் அல்லது இரவு உணவிர்க்கு சாப்பிடலாம். #book,#goldenapron3, #கோதுமை
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 2
சக்கரை வள்ளிகிழங்கை குக்கரில் வேகவைத்துக் கொள்ளுங்கள். முக்கால் வெந்தால் போதும். தோலை உரித்து ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து கொள்ளவும். 1 மேஜை கரண்டி எடுத்து உருண்டை – ஸ்டவ்விங்(stuffing or filling) செய்துகொள்ளுங்கள்.
- 3
பரோட்டா மாவு தயாரிக்க. ஓருகிண்ணத்தில் மாவு எல்லாவற்றையும் விரலால் ஒன்று சேர்க்க, ஸிறிது சிறிதாக தயிர் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள் தேவைப்பட்டால் நீர் சேர்க்க, மடித்து மடித்து பிசைந்தால் பள பளவென்று ஸ்மூத்தாக (smooth) வரும். உலராம லிருக்க மாயாவின் மேல் சிறிது எண்ணை தடவுங்கள்; ஓரு ஈரத்துணியால் முடி 15 அல்லது 30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க.
ஓரு எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்க. சப்பாத்தி குழிவியால் உருண்டையை தேய்த்து (புகைபடத்தில் இருப்பது போல),
நடுவில் வள்ளிகிழங்கு உருண்டை வைத்து மூடுக. - 4
கிழங்கு பில்லிங் பிதுங்கி மேலெ வராமல் இருக்க சிறிது மாவால் முடி, மிகவும் ஜாக்கிரத்தையாக குழவியால் வட்டமாக செய்துகொள்ளுங்கள். மெல்லியதாக இருக்க வேண்டியதில்லை. இதை ஒரு ஸ்கில்லெட்டில் (skillet) சுடுங்கள்,
ஸ்கில்லெட்டை மிதமான நெருப்பின் மீது வைக்க. சிறுது உருகிய வெண்ணையோ அல்லது எண்ணையோ தடவிகொள்ளுங்கள். பரோட் டாவின் இரண்டு பக்கமும் பொன்னிறமாக இருக்க வேண்டும். விரும்பினால் அதன்மேல் வெண்ணை தடவலாம். - 5
ருசித்துப் பார்க்க, ருசியான மணமான சத்தான பரோட்டாவுடன் விருப்பமான காய்கறி பொரியல், கூட்டு, சட்னி, ஊறுகாய், தயிர் எதுவேண்டுமானாலும் சேர்த்து பறிமாறுக.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சக்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா


கேழ்வரகு வெல்ல அடை


நெய் பரோட்டா


மெந்தய கீரை பரோடா


கேரட் போளி


தேங்காய்-பால் பர்பி


பன் பரோட்டா(bun parotta recipe in tamil)


மெந்தய கீரை காலிஃப்ளவர் பரோடா


பன் பரோட்டா


கையில் பிடிக்க ஒரு சுவையான காய்கறி பொக்கே (boquet)


சீசி மல்டை லேயர் நான் (பரோட்டா)


சுருள் போளி (Surul poli recipe in tamil)


மலபார் பரோட்டா (Malabar parotta recipe in tamil)


தேங்காய் போளி (Thenkaai boli recipe in tamil)


ரிகோட்டா சீஸ் ஹல்வா


விரத ஆலூ பரோட்டா (ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா)(aloo parotta recipe in tamil),


இனிப்பான ஆப்பிள் சமோசா


கொத்து கடலை சுண்டல்


சக்கரை வள்ளி கிழங்கு சாக்லேட் பை(sweet potato chocolate pie recipe in tamil)


ஒரு ஜம்போ பேஸ்டரி


பிரெஞ்ச் கிரேப் (French Crepe recipe in tamil)


கருப்பு அரிசி பாதாம் கீர்


பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம்


கோதுமை சேவை பாயசம்


தினை அரிசி பீட் ரூட் தோசை


ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா(potato masala potato recipe in tamil)


உருளை வெங்காயம் சமோசா (Urulai venkayam samosa recipe in tamil)


பாசி பயறு இட்லி


முடக்கத்தான் கீரை உருண்டை குழம்பு (Mudakkathaan keerai urundai kulambu recipe in tamil)


மிளகு வடை

கமெண்ட்