முருங்கை பூ கூட்டு

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#கோல்டன் அப்ரோன் 3
நாம் முருங்கை மரத்தில் உள்ள முருங்கைகாய் முருங்கை கீரையை உணவாக சமைத்து சாப்பிட்டு இருப்போம் .ஏனோ முருங்கை பூவை நாம் உணவாக பயன் படுத்தி இருக்க மாட்டோம் .ஆனால் முருங்கை பூவில் மிகவும் அதிக சத்தும் அதிக சுவையும் உள்ளது .அதிக மருத்துவ குணமும் உள்ளது .

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30mins
2 பரிமாறுவது
  1. முருங்கை பூ 1 கப்
  2. துவரம் பருப்பு 1/4 கப்
  3. சின்ன வெங்காயம் 15
  4. பூண்டு பல் 6
  5. வரமிளகாய் 3
  6. தண்ணீர்
  7. உப்பு
  8. தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்
  9. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  10. தாளிக்க
  11. நெய் 2 டீஸ்பூன்
  12. கடுகு 1/4 டீஸ்பூன்
  13. சீரகம் 1/4 டீஸ்பூன்
  14. உளுந்து பருப்பு 1/2 டீஸ்பூன்
  15. கடலை பருப்பு 1/2 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    முருங்கை பூ 1 கப் கழுவி எடுத்து வைக்கவும்.சின்ன வெங்காயம் 15 தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.பூண்டு 6 பல் தோல் நீக்கி கழுவி தட்டி வைக்கவும்.வரமிளகாய் 3 விதை நீக்கி கிள்ளி வைக்கவும்.துவரம் பருப்பு 1/4 கப் குக்கரில் வேக வைக்கவும்.துருவிய தேங்காய் 2 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.

  2. 2

    கடாயில் நெய் 2 டீஸ்பூன் ஊற்றி கடுகு1/4 டீஸ்பூன் சீரகம் 1/4 டீஸ்பூன் உளுந்து பருப்பு 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு 1/2 டீஸ்பூன் தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கி வரமிளகாய் சேர்க்கவும்.முருங்கை பூ சேர்க்கவும்.

  3. 3

    முருங்கை பூ வதங்கியது உப்பு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.நன்கு வெந்தவுடன் வெந்த துவரம்பருப்பு சேர்த்து கலக்கி தேங்காய் துருவல் சேர்க்கவும்.

  4. 4

    கலக்கி விடவும்.சுவையான முருங்கை பூ கூட்டு ரெடி.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்றது. சுவை சூப்பர்.😋😋

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes