முருங்கைப் பூ பொரியல் (Murungai poo poriyal recipe in tamil)

முருங்கை பூவில் உடலுக்குத் தேவையான அணைத்து சத்துகளும் உள்ளன. கண்களுக்கு மிகவும் நல்லது.
#book #nutrient1
முருங்கைப் பூ பொரியல் (Murungai poo poriyal recipe in tamil)
முருங்கை பூவில் உடலுக்குத் தேவையான அணைத்து சத்துகளும் உள்ளன. கண்களுக்கு மிகவும் நல்லது.
#book #nutrient1
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முருங்கை பூவை சுத்தம் செய்து எடுக்கவும். (காம்புகள் எல்லாம் சுத்தமாக அகற்ற வேண்டும்)
- 2
சின்ன வெங்காயம் எடுத்து பொடியாக வெட்டி வைத்து கொள்ளவும்.
- 3
வாணலியை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 4
பின்பு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை பூவை சேர்த்து நன்கு வதக்கி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.
- 5
ஐந்து நிமிடத்தில் வெந்துவிடும்.
- 6
மிதமான சூடு போதுமானது. திறந்து பார்த்து, உப்பு சரியாக உள்ளதா என பார்த்த பின், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து, அடுப்பை அணைக்கவும்.
- 7
இந்த பொரியல் செய்வது மிகவும் எளிது. இதே போல் முருங்கை இலை யிலும் செய்யலாம். ஆனால் சுத்தம் செய்வது தான் கொஞ்சம் கடினம்.
- 8
சத்துக்கள் நிறைந்த, சுவையான முருங்கை பூ பொரியல் தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட் (6)