இனிப்பான ஆப்பிள் சமோசா

கல்லூரியில் படிக்கும் நாளிலிருந்து இன்றுவரை என் மதிய உணவு ஒரு ஆப்பிள். கிரேனி ஸ்மித் ஆப்பிள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிறிது புளிப்பும் இனிப்பும் நிறைந்த சுவையான ஆப்பிள் பேக் (bake) செய்ய உகந்தது. நடுப்பாகத்தை நீக்கிவிட்டு மீதியை சிறு துண்டுகளாக வெட்டி, கூட நாட்டு சக்கரை, ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள், இலவங்கப்பட்டை தூள், சோள மாவு, ஆரஞ்ச் பழ சாரு சேர்த்து மைக்ரோவேவ் அடுப்பில் வேகவைத்து நிரப்புதல் (filling) செய்தேன். நிரப்புதலை குளிர் பெட்டியில் ஒரு நாள் குளிர செய்தேன்.பஃப் பேஸ்ட்ரி உபயோகித்து சமோசா செய்தேன்
பஃப் பேஸ்ட்ரியும் இரண்டு நாட்கள் முன்பே செய்து ரேபிரிஜெரேடரில் வைத்துக்கொண்டேன். மாவு குளிர்ந்து இருக்க வேண்டும். வெண்ணையும் குளிர்ந்து இருக்க வேண்டும். . பேஸ்ட்ரி மாவு வெளியில் எடுத்து சப்பாத்தி குழவியால் பேஸ்ட்ரி ஷீட் ( 12” நீளம் , 8’’ அகலம்) செய்து வெண்ணை தடவி மடித்து (புகை படம்) குளிர செய்தேன். ஒரு மணி நேரம் கழித்து ரேபிரிஜெரேடரிலிருந்து சப்பாத்தி கல்லில் மறுபடியும் தேய்த்து வெண்ணை தடவி மடித்து குளிர செய்தேன். 3 முறை இதே போல செய்து, கடைசியாக பேஸ்ட்ரி ஷீட் ( 12” நீளம் , 8’’ அகலம்) செய்து கொண்டேன், 4” நீளம், 4”அகலம் துண்டு போட்டு மறுபடியும் 30 நிமிடங்கள் குளிரசெய்தேன். வெளியே எடுத்து துண்டின் நடுவில் 1 மேஜை கரண்டி ஆப்பிள் ஃபிலிங்க் (filling) வைத்து மூடி (படம்) ஒரு நாள் குளிர செய்தேன், மறு நாள் 400F (200C) பேக்கிங் செய்தேன். எண்ணையில் பொரித்தால் சுவை வேறு. பேகிங் செய்தால் சுவை வேறு. . #cookpaddessert #book
இனிப்பான ஆப்பிள் சமோசா
கல்லூரியில் படிக்கும் நாளிலிருந்து இன்றுவரை என் மதிய உணவு ஒரு ஆப்பிள். கிரேனி ஸ்மித் ஆப்பிள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிறிது புளிப்பும் இனிப்பும் நிறைந்த சுவையான ஆப்பிள் பேக் (bake) செய்ய உகந்தது. நடுப்பாகத்தை நீக்கிவிட்டு மீதியை சிறு துண்டுகளாக வெட்டி, கூட நாட்டு சக்கரை, ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள், இலவங்கப்பட்டை தூள், சோள மாவு, ஆரஞ்ச் பழ சாரு சேர்த்து மைக்ரோவேவ் அடுப்பில் வேகவைத்து நிரப்புதல் (filling) செய்தேன். நிரப்புதலை குளிர் பெட்டியில் ஒரு நாள் குளிர செய்தேன்.பஃப் பேஸ்ட்ரி உபயோகித்து சமோசா செய்தேன்
பஃப் பேஸ்ட்ரியும் இரண்டு நாட்கள் முன்பே செய்து ரேபிரிஜெரேடரில் வைத்துக்கொண்டேன். மாவு குளிர்ந்து இருக்க வேண்டும். வெண்ணையும் குளிர்ந்து இருக்க வேண்டும். . பேஸ்ட்ரி மாவு வெளியில் எடுத்து சப்பாத்தி குழவியால் பேஸ்ட்ரி ஷீட் ( 12” நீளம் , 8’’ அகலம்) செய்து வெண்ணை தடவி மடித்து (புகை படம்) குளிர செய்தேன். ஒரு மணி நேரம் கழித்து ரேபிரிஜெரேடரிலிருந்து சப்பாத்தி கல்லில் மறுபடியும் தேய்த்து வெண்ணை தடவி மடித்து குளிர செய்தேன். 3 முறை இதே போல செய்து, கடைசியாக பேஸ்ட்ரி ஷீட் ( 12” நீளம் , 8’’ அகலம்) செய்து கொண்டேன், 4” நீளம், 4”அகலம் துண்டு போட்டு மறுபடியும் 30 நிமிடங்கள் குளிரசெய்தேன். வெளியே எடுத்து துண்டின் நடுவில் 1 மேஜை கரண்டி ஆப்பிள் ஃபிலிங்க் (filling) வைத்து மூடி (படம்) ஒரு நாள் குளிர செய்தேன், மறு நாள் 400F (200C) பேக்கிங் செய்தேன். எண்ணையில் பொரித்தால் சுவை வேறு. பேகிங் செய்தால் சுவை வேறு. . #cookpaddessert #book
சமையல் குறிப்புகள்
- 1
ஆப்பிள் ஃபிலிங்க்: ஆப்பிள் நடுப்பாகத்தை நீக்கிவிட்டு மீதியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்க.ஒரு கிண்ணத்தில் ஆப்பிள் கூட நாட்டு சக்கரை, ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள், இலவங்கப்பட்டை தூள், சோள மாவு, மைதா மாவு, ஆரஞ்சு பழ சாரு, ஜெஸ்ட் சேர்த்து நன்றாக கிளறி ஒன்று சேருங்கள்.நிரப்புதலை மைக்ரோவேவ் அடுப்பில் (அல்லது வேறு அடுப்பின் மேலேயோ வைத்து ( 15-20 நிமிடங்கள் வைத்து) கெட்டியாக்குங்கள். எதில் வைத்தாலும் அப்போ அப்போ கிளற வேண்டும். வெளியில் எடுத்து வைத்து ஆற வையுங்கள்.
- 2
மாவை உப்புடன் சேர்க்க. குளிர்ந்த நீரை (1/ 4 கப்புக்கும் குறைவாய்) சிறிது சிறிதாக சேர்த்து கையால் கலந்து கொள்ளுக. பிளாட் (flat) உருண்டை செய்து 1 மணியாவது குளிர செய்க. குளிர செய்க என்றால் ரேபிரிஜெரேடரில் வைக்க என்று அர்த்தம். மாவை ரேபிரிஜெரேடரில் எப்பொழுதும் ரேப் (wrap) செய்ய வேண்டும்.வெண்ணையை சின்ன சின்ன துண்டாக வெட்டி 2 பிளாஸ்டிக் ஷீட் நடுவே வைத்து மேலெ குழவியால் அடிக்க. நான் ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் குழவியால் அடித்தேன் வெண்ணை பரவும். குளிர செய்க
- 3
ரோல் செய்யும் பொது எப்பொழுது கல்லின் மேல் லேசாக மாவு தூவிக்கொள்ள வேண்டும். மாவை சப்பாத்தி கல்லின் மேல் வைத்து குழவியால் ரோல் பெரிய (16 அங்குலம் நீளம், 10 அங்குலம் அகலம் அளவு (Rectangle) பண்ணுக.
பாதி வெண்ணை எடுத்து இதன் நடுவில் வைத்து கீழ் பாதியை மடித்து வெண்ணையை மூடுக. மேல் பாதியையும் அதே போல செய்க(படம்). மேல் மடிப்பை கீழ் மடிப்பின் மேல் போடுக. இப்போது 900 திருப்பி கீழேயும் மேலேயும் மடித்து ஒன்றின் மேல் ஒன்று போடுங்கள் (படம்), குளிர வைக்க - 30 நிமிடங்கள் - 4
மாவை வெளியே எடுத்து ரோல் 12 அங்குலம் நீளம் 8 அங்குலம் அகலம் செய்க. ஒரத்தை பீட்ஸா கட்டரால் வெட்டி ஒழுங்கு பண்ணுக.
4 அங்குலம் சதுரமாக வெட்டி கொள்ளுங்கள், பேகிங் ப்ளேட்டின் மேல் பார்ச்மேன்ட் பேப்பர் போட்டு அதன் மேல் சதுரங்களை வைத்து பிளாஸ்டிக் ஷீட்டால் முடி 15 நிமிடங்கள் குளிர செய்க. பின்னர் பில்லிங் நிரப்பி சமோசா போல மடிக்கவும் - 5
பேகிங் அவனை (oven) ப்ரீஹீட் (preheat) 400 F. 30-40 நிமிடங்கள் பேக் செய்க. சமோசா மேல் சக்கரை தூவுக. தட்டிப்பார்த்தால் முழுதும் பேக் ஆகிவிட்டதா என்று தெரியும். வெளியே எடுத்து ஆற வைக்க. ருசித்துப் பார்க்க.ருசித்து பார்த்த பின் ஐஸ் கிரீம், காப்பி (coffee) அல்லது டீ (tea) உடன் பரிமாறுக
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இனிப்பான ஆப்பிள் சமோசா(apple samosa recipe in tamil)
#CF2அம்மா தீபாவளிக்கு செய்யும் இனிப்பு பண்டங்களில் ஒன்று கர்ஜுரிக்காய், இனிப்பான சமோசா. இதன் பில்லிங் தேங்காய் துருவல் வெல்லம். நான் ஆப்பிள். கிரேனி ஸ்மித் நாட்டு சக்கரை பில்லிங் பேஸ்ட்டரி ஷீட்டீல் உள் வைத்து பேக் செய்தேன் Lakshmi Sridharan Ph D -
சுவையான ஆப்பிள் பை (Apple pie recipe in tamil)
இட்லி சாம்பார் என்றால் தமிழ்நாடு ஆப்பிள் பை என்றால் அமெரிக்கா. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று சொல்வது போல ஸ்ரீதருக்கும் எனக்கும் தமிழ்நாட்டில் ஒரு கால் அமெரிக்காவில் ஒரு கால். இது ஸ்ரீதருக்கு மிகவும் விருப்பமான ஆப்பிள் பை ரெஸிபி கிரேனி ஸ்மித் ஆப்பிள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிறிது புளிப்பும் இனிப்பும் நிறைந்த சுவையான ஆப்பிள்; பை செய்ய உகந்தது. நடுப்பாகத்தை நீக்கிவிட்டு மீதியை சிறு துண்டுகளாக வெட்டி, கூட நாட்டு சக்கரை, ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள், இலவங்கப்பட்டை தூள், சோள மாவு, எலுமிச்சம்பழ சாரு சேர்த்து மைக்ரோவேவ் அடுப்பில் வேகவைத்து நிரப்புதல் (filling) செய்தேன். நிரப்புதலை குளிர் பெட்டியில் சில மணி நேரம் குளிர செய்தேன். மளிகை கடையில் 2 மேலோடு வாங்கி, ஒன்றை நிறப்புதலுக்கும், இரண்டாவதை நிறப்புதலுக்கு மேலே பின்னல் தட்டி போல செய்ய வைத்துக் கொண்டேன் . பை ஷெல்லை நிறப்பி மூடி மின்சார அடுப்பில் 400F (200 C) ஒரு மணி நேரம் பேக் (bake) செய்தேன். இனிப்பான சுவை மிகுந்த பை தயார்.#book Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் பை(apple pie recipe in tamil)
#makeitfruityஇட்லி சாம்பார் என்றால் தமிழ்நாடு ஆப்பிள் பை என்றால் அமெரிக்கா. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று சொல்வது போல ஸ்ரீதருக்கும் எனக்கும் தமிழ்நாட்டில் ஒரு கால் அமெரிக்காவில் ஒரு கால். இது ஸ்ரீதருக்கு மிகவும் விருப்பமான ஆப்பிள் பை ரெஸிபி கிரேனி ஸ்மித் ஆப்பிள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிறிது புளிப்பும் இனிப்பும் நிறைந்த சுவையான ஆப்பிள்; பை செய்ய உகந்தது Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் க்றம்பிள் (Apple crumble recipe in tamil)
"an apple a day keeps the doctor away" இது எல்லோருக்கம் தெரியும். ரெஸிபி கிரேனி ஸ்மித் ஆப்பிள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிறிது புளிப்பும் இனிப்பும் நிறைந்த சுவையான ஆப்பிள் பை, ஆப்பிள் க்றம்பிள்செய்ய உகந்தது. #wt2 Lakshmi Sridharan Ph D -
நெல்லிக்காய் ஜாம்
மீனம்பாக்கத்தில் இருந்த எங்கள் வீட்டீல் அரை நெல்லிக்காய் மரம் truck load காய்கள் கொடுக்கும். அம்மா ஜாம் செய்வார்கள். கடந்த கால நினைவுகள் பசுமையாக இருக்கிறது. இங்கே எனக்கு frozen அம்லா தான் கிடைக்கிறது. நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, பனங்கல்கண்டு, ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து ஜாம் செய்தேன். வாசனைக்கு இலவங்கப்பட்டை தூள், ஏலக்காய். ஜாதிக்காய். அதிமதுரம்.#arusuvai3 Lakshmi Sridharan Ph D -
கேரட் போளி
அம்மா சொல்லும் கதை நினைவுக்கு வருகிறது “ஹத்து போளிஅனுமந்த ராவ்” 10 போளி அனுமந்த ராவ் சாப்பிட்டாராம். என் ரெஸிபி மூலம் போளி செய்தால் அவர் 20 போளி சாபிப்பிடுவாரா? கேரட்டை பிளென்ஜ் செய்து , துருவி, சிறிது நாட்டு சக்கரை சேரத்து பூரணம் செய்தேன். மைதா (enriched all purpose flour) சிறிது உருக்கி வெண்ணையும், தண்ணீரும் சேர்த்து கலந்து, சின்ன உருண்டைகள் செய்து, விரலில் சிறிது எண்ணை தடவிக்கொண்டு பார்ச்மேன்ட் பேப்பர் மேல் வட்டம்மாகா தட்டி, நடுவில் நடுவில் பூரண உருண்டையை வைத்து மூடி போளி தட்டினேன்.நான்-ஸ்டிக் (non-stick skillet) ஸ்கில்லெட்டில் வெண்ணை தடவி வாசனையான சத்தான போளி தயார் செய்து ருசித்தேன். மறு நாள் சாப்பிட்டால் பூரணம் ஊறி போளி அதிக ருசியாக இருக்கும், பாலில் சிறிது ஏலக்காய் பொடி, அதிமதுரம், ஜாதிக்காய் பொடிகள், குங்குமப்பூ போட்டு ஊற வைத்தும் சாப்பிடலாம்#carrot Lakshmi Sridharan Ph D -
கேழ்வரகு வெல்ல அடை
நானும் என் சகோதர சகோதரிகளும் பாள்ளிக்கூடத்தில் படிக்கும் போது அம்மா செய்த சுவையும் சத்தும் மிகுந்த கேழ்வரகு வெல்ல அடை ரசித்து ருசித்து சாப்பிட்டதுண்டு., பழைய கால இனிய நினைவுகள் மனதை விட்டு நீங்குவதில்லை, இது அம்மா ரெஸிபி இல்லை. இது என் ரெஸிபி. எளிய சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யலாம். கொதிக்கும் நீரில் நாட்டு சக்கரை போட்டு, கறைந்தவுடன், கூட வாசனைக்கு ஏலக்காய் பொடி, தேங்காய் துண்டுகள் சேர்ததேன். சிறிது சிறிதாக கேழ்வரகு மாவை சேர்த்து கிளறி மெதுவான (soft and smooth) அடை மாவு செய்து கொண்டேன் . பெரிய எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்து கொண்டு, ஒரு பார்ச்மென்ட் பேப்பர் மீது எண்ணை தடவி உருண்டையை சின்ன அடையாக தட்டி கொண்டேன், மிதமான நெருப்பின் மேல் ஸ்கெல்லெட்டில் (skillet) எண்ணை தடவி இரண்டு பக்கமும் வேகவைத்து அடை தயார் செய்தேன். இங்கேயும் பள்ளிக்கூடம் மூடிவிட்டார்கள். வெல்ல அடைகளை குட்டி மருமாளோடும், மருமானோடும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். #ஸ்னாக்ஸ் Lakshmi Sridharan Ph D -
கேரட் பாதாம் கீர்
அழகிய நிறம், சுவை, விடமின் சத்துக்கள் கூடிய கீர்Friend --Meena Ramesh #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
வால்நட் சேர்த்த க்ரஸ்ட் கூடிய ஆப்பிள் டார்ட் (Apple Tart)
#walnuttwists எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம், . கலிபோர்னியா வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 HDL கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் ஏராளம். சுவையான, சத்தான ஆப்பிள் டார்ட் Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் சின்னமேன் ரோல்(apple cinnamon roll recipe in tamil)
#makeitfruityகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஆப்பிள் பிரட் வைத்து செய்த ஆப்பிள் சின்னமேன் ரோல். ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி செய்து கொடுக்கலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
சக்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா
சத்து, மணம், நிறம், ருசி –இந்த நான்கும் ஏராளமாக சக்கரை வள்ளிக்கிழங்கில் உள்ளன. பல உணவு ரெஸிபிகளில் இதை சேர்ப்பேன். கோதுமையில் உள்ள குளுடென்(gluten) சில மனிதர்களுக்கு அலர்ஜி தரும். அவர்கள் குளுடென் நீக்கிய பொருட்களை பயன்படுத்துவது நல்லது. விலை சிறிது அதிகமாக இருந்தாலும் குளுடென் நீக்கிய கோதுமை வாங்குவது நல்லது. கோதுமையுடன் ஸ்பெல்ட் (spelt), தேங்காய் மாவுகளையும் சேர்த்து கொண்டேன். எப்பொழுதும் பூச்சி மருந்து உபயோகிக்காமல் பயிரிடப்பட்ட தனியங்களையும், காய்கறிகளையும் உபயோகிப்பேன். இந்தியாவில் எல்லா பொருட்களும் கிடைக்கின்றன. மாவு பிசைய நான் எப்பொழுதும் தயிர் பயன்படுத்துவேன், மாவில் உப்பு சேர்ப்பதில்லை. மாவை நன்றாக பிசைந்து ஒரு ஈற துணியால் முடி 15-30 நிமிடங்கள் ஆற (rest) வைத்தேன். முக்கால் வேக வைத்த சக்கரை வள்ளி கிழங்கை தோலை நீக்கி, ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சின்ன சின்ன உருண்டைகள் செய்தேன், பரோட்டா மாவை நன்றாக கையால் பிசைந்து ஒரு எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்தேன். சிறிது கோதுமை மாவை கல்லில் மேல் துவி உருண்டையை சப்பாத்தி குழவியால் வட்டமாக தேய்த்து கொண்டேன். வள்ளி கிழங்கு உருண்டையை நடுவில் வைத்து, அதன் மேல் சிறிது மாவு தூவி பரோட்டாவை (புகைபடத்தில் இருப்பது போல) மூடினேன். மிகவும் ஜாக்கிரத்தையோடு பில்லிங்(filling) பிதுங்காமல் தேய்க்க வேண்டும். ரொம்ப மெல்லியதாக இருக்க தேவையில்லை. மிதமான நெருப்பின் மேல் தோசைக் கல்லை வைத்து உருகிய வெண்ணை தடவி பரோட்டவின் இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவைத்தேன். பரோட்டாவுடன் விருப்பமான காய்கறி பொரியல், கூட்டு, சட்னி, ஊறுகாய், தயிர் எதுவேண்டுமானாலும் சேர்த்து காலை, மதியம் அல்லது இரவு உணவிர்க்கு சாப்பிடலாம். #book,#goldenapron3, #கோதுமை Lakshmi Sridharan Ph D -
பிரெஞ்ச் கிரேப் (French Crepe recipe in tamil)
பல ஆண்டுகளுக்கு முன்பு, முதல் முதலில் நான் மான்ட்ரியல் கனடாவில் பிரெஞ்ச் கிரேப் ருசித்தேன் , அதிலே சீஸ் ஃபில்லிங்(filling) இருந்தது. எனக்கு சீஸ் மிகவும் விருப்பம். மசால் தோசை போல பெரிசா மெல்லியதாக ஆனால் மொரு மொரு என்று இல்லாமல் மெத்தென்று (soft silky) ஆப்பம் போல இருந்தது. காலை மதியம், மாலை எப்பொழுது வேணுமானாலும் சாப்பிடலாம். இனிப்பான ஃபில்லிங் அல்லது காரமான ஃபில்லிங் உள்ளே வைக்கலாம் ஸ்ரீதருக்காகவும், போட்டிக்காகவும் இன்று பிரெஞ்ச் கிரேப் செய்தேன், இங்கே முட்டையில் கரு கிடையாது (unfertilized). கிரேப். செய்வது மிகவும் சுலபம். பால், முட்டை, மைதா, வெண்ணை கலந்து கொஞ்சம் தண்ணியாகவே மாவை தயாரித்து நான் ஸ்டிக் ( non stick pan) தோசை கல்லில், ¼ கப் மாவில் ஒரு மெல்லிய கிரேப் செய்தேன். 12 கிரேப் செய்தேன். 4 கிரேப்பை ஃபில்லிங் சேர்க்க உபயோகித்தேன். கிரேப்பை சட்னியோடு கூட சாப்பிடலாம் சிறிது வருத்த தேங்காய் துருவல். நாட்டு சக்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து இனிப்பு ஃபில்லிங் செய்தேன், காரத்திர்க்கு (stir fried) முட்டை கோஸ், பட்டாணி,கேரட், வெங்காயம் பொரியல். மேலே புகை படத்தில் இருப்பது போல ஃபில்லிங்கை கிரேப் மேல் வைத்து சுருட்டினேன், சுருள் சுருளான மெத்து மெத்தான சுவையான கிரேப் தயாரிதேன். 2 கிரேப் இனிப்பு ஃபில்லிங்; 2 கிரேப் முட்டை கோஸ் ஃபில்லிங். சுவைத்தேன். நன்றாக இருந்தது Lakshmi Sridharan Ph D -
தேங்காய்-பால் பர்பி
தேங்காய், பால் இரண்டுமே சுவையான சத்தான புனித பொருட்கள். தேங்காயிலிருக்கும் கொழுப்பு சத்து ஆரோக்கியத்திர்க்கு நல்லது, தெய்வத்திர்க்கு சமர்ப்பித்த பின் இந்துக்கள் அனைவரும் இவை இரண்டையும் உணவில் சேர்த்துக்கொள்வது வழக்கம். அதையே நானும் செய்தேன். தேங்காய் துருவலை பர்பி செய்ய உபயோகிப்பார்கள். நான் அவ்வாறு செய்வதற்க்கு பதிலாக தேங்காய் மாவை சக்கரையோடும், பாலோடும், உருக்கிய வெண்ணையோடும் சேர்த்து பர்பி செய்தேன். வாசனைக்கு ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. அலங்கரிக்க முந்திரி, பாதாம். குறைந்த நேரத்தில் சுவையான மெத்தான சத்தான பர்பி தயார். மெத்தென்று இருப்பதால் இதை அல்வா என்றும் சொல்லலாம். எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் ருசியோ ருசி, . #cookpaddessert #book Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா
சத்து, மணம், நிறம், ருசி –இந்த நான்கும் ஏராளமாக சக்கரை வள்ளிக்கிழங்கில் உள்ளன. பல உணவு ரெஸிபிகளில் இதை சேர்ப்பேன். கோதுமையில் உள்ள குளுடென்(gluten) சில மனிதர்களுக்கு அலர்ஜி தரும். அவர்கள் குளுடென் நீக்கிய பொருட்களை பயன்படுத்துவது நல்லது. விலை சிறிது அதிகமாக இருந்தாலும் குளுடென் நீக்கிய கோதுமை வாங்குவது நல்லது. கோதுமையுடன் ஸ்பெல்ட் (spelt), தேங்காய் மாவுகளையும் சேர்த்து கொண்டேன். எப்பொழுதும் பூச்சி மருந்து உபயோகிக்காமல் பயிரிடப்பட்ட தனியங்களையும், காய்கறிகளையும் உபயோகிப்பேன். இந்தியாவில் எல்லா பொருட்களும் கிடைக்கின்றன. மாவு பிசைய நான் எப்பொழுதும் தயிர் பயன்படுத்துவேன், மாவில் உப்பு சேர்ப்பதில்லை. மாவை நன்றாக பிசைந்து ஒரு ஈற துணியால் முடி 15-30 நிமிடங்கள் ஆற (rest) வைத்தேன். முக்கால் வேக வைத்த சக்கரை வள்ளி கிழங்கை தோலை நீக்கி, ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சின்ன சின்ன உருண்டைகள் செய்தேன், பரோட்டா மாவை நன்றாக கையால் பிசைந்து ஒரு எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்தேன். சிறிது கோதுமை மாவை கல்லின் மேல் துவி உருண்டையை சப்பாத்தி குழவியால் வட்டமாக தேய்த்து கொண்டேன். வள்ளி கிழங்கு உருண்டையை நடுவில் வைத்து, அதன் மேல் சிறிது மாவு தூவி பரோட்டாவை (புகைபடத்தில் இருப்பது போல) மூடினேன். மிகவும் ஜாக்கிரத்தையோடு பில்லிங்(filling) பிதுங்காமல் தேய்க்க வேண்டும். ரொம்ப மெல்லியதாக இருக்க தேவையில்லை. மிதமான நெருப்பின் மேல் தோசைக் கல்லை வைத்து உருகிய வெண்ணை தடவி பரோட்டவின் இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவைத்தேன். பரோட்டாவுடன் விருப்பமான காய்கறி பொரியல், கூட்டு, சட்னி, ஊறுகாய், தயிர் எதுவேண்டுமானாலும் சேர்த்து காலை, மதியம் அல்லது இரவு உணவிர்க்கு சாப்பிடலாம். #book,#goldenapron3#wheat Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் கேக்
#leftover ஆப்பிள் கேக் ஆப்பிள் , சாக்லேட் மீதியான கேக் அல்லது பிஸ்கட்டிலில் மிக சுலபமாக செய்யக்கூடியது Viji Prem -
-
சக்கரை வள்ளி கிழங்கு, பீட் ரூட், ஆப்பிள், செலரி, லீக் சூப்
இந்த ரெஸிபியில் இனிப்பிர்க்கு சக்கரை வள்ளி கிழங்கு., வாசனைக்கு செலரி. பூண்டு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடிகள். அழகிய நிறத்திர்க்கு பீட் ரூட், எல்லாம் நலம் தரும், சுவை மிகுந்த பொருட்கள். காய்கறிகள் எல்லாம் பூச்சி கொல்லும் மருந்துகள் உபயோகிக்காமல் வளர்க்கப்பட்டவைகள் Friend Meena Ramesh ன் கார சாராமான ஸ்நாக் ரெசிபி கூட இதையும் சேர்த்து ருசிக்க #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
இனிப்பு சமோசா
#kkநாங்கள் சிறுவார்களாக இருக்கும் பொழுது அம்மா கிருஷ்ணா ஜயந்தி அன்று செய்வார்கள், குட்டி கிருஷ்ணனுக்கு பிடித்த ஸ்நாக். அம்மா கர்ஜுரிக்காய் என்று சொல்வார்கள். எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் பான் கேக் (Apple pancake recipe in tamil)
#GA4... ஆப்பிள் பான் கேக் மிக சுவையானது... ஆரோக்கியமான இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
வாழைப்பழ புட்டிங் (pudding) (Vaazhaipazha pudding recipe in tamil)
மா, பாலா, வாழை –முக்கனிகளில் வாழைக்கு தான் முதலிடம் கொடுக்கவேண்டும், வாழை வருடம் முழுவதும். குறைந்த விலையில் கிடைக்கும் பழம்; என்றும் இறைவனுக்கு படைக்கலாம். ; எல்லா விசேஷங்களிலும் முதலிடம். நார் , இரும்பு, போட்டேசியம் நிறைந்ததால் இது நலம் தரும் பழம். தினமும் காலையில் ஒரு பழம் சாப்பிடுவேன். முதல்தரமாக பால்,சோள மாவு, சக்கரை மூன்ரோடும் சேர்த்து இனிப்பான புட்டிங் செய்தேன் #arusuvai1 #goldenapron3-pudding Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் பர்பி (Apple purbi recipe in tamil)🍎🍎🍎🍎
#Cookapdturns4தினமும் ஒரு ஆப்பிள் நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Sharmila Suresh -
ஆப்பிள் வாழைப்பழ மில்க் ஷேக்.. (Apple vaazhaipazham milkshake recipe in tamil)
#GA4#.. week 4. ஆப்பிள், வாழைப்பழத்துடன் தேன் கலந்து செய்யும் இந்த மில்க் ஷேக் ரொம்ப ஹெல்த்தியான குளிர் பானம்... காலை உணவாக இதை சாப்பிடும்போது நாள் முழுதும் புத்துணர்ச்சி உண்டாகும்... Nalini Shankar -
புளூ பெர்ரி பேன் கேக்
சுவையான சத்தான எல்லாரும் விரும்பும் புளூ பெர்ரி பேன் கேக்#breakfast Lakshmi Sridharan Ph D -
சுவையான வாசனையான லெமன் சாதம் (suvaiyana vasaai yana lemon saatham recipe in Tamil)
லெமன் எலுமிச்சை பழம் இனத்தை சேர்ந்தது. தமிழ்நாட்டில் நான் இந்த மரத்தைப் பார்ததில்லை. மரமும் பெரியது, பழமும் பெரியது. நல்ல வாசனை, நிறைய சாறு. எங்கள் தோட்டத்தில் இப்பொழுது நூற்றுக்கணக்கான பழங்கள். வாரத்திரக்கு ஒரு முறையாவது லெமன் சாதம் பண்ணுவேன. குக்கரில் சோறு உதிர உதிரியாகப் பண்ணிவிட்டு, அதோடு பழச்சாறு, தாளித்த கடுகு, சீரகம்,பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, பெருங்காயம், உப்பு போட்டு சுவையும் மணமும் நிறைந்த லெமன் சாதம் செய்தேன், வறுத்த முந்திரி, கொத்தமல்லி போட்டு அலங்கரிதேன். #goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் மஃபின் (muffins recipe in tamil)
#wt3சத்து சுவை நிறைந்த ஆப்பிள் மஃபின். நாளுக்கு ஒரு ஆப்பிள் –மருத்துவர்களை தூர வைக்கும். பனியோ, மூக்கு உறையும் குளிரோ, நான் மிச்சிகனில் இருக்கும் பொழுது என் மதிய உணவு ஓரு ஆப்பிள். “ஆக்க பொறுத்தவனக்கு ஆற பொறுக்கவில்லை” போட்டோ எடுக்கும் முன்பே ஸ்ரீதர் 2 மஃபின் சாப்பிட்டாயிற்று!!! ருசியான ருசி Lakshmi Sridharan Ph D -
பப்பாளி பழ இனிப்பு பச்சடி
#COLOURS1 #asahikaseiindiaஅம்மாவின் மாம்பழ பச்சடி இன்றும் என்றும் என் நாவில் இனிக்கும். பப்பாளி பழத்தில் நான் சிறிது வேறு விதமாக பச்சடி செய்தேன். காரமும் இனிப்பும் சேர்ந்த தனி சுவை. கூட கிராம்பு ஏலக்காய் பொடி வாசனையும் சுவையையும் கூட்டியது. இந்த வாரம் எல்லாம் சத்து சுவை நிறைந்த பப்பாளி மயம் Lakshmi Sridharan Ph D -
கோதுமை சேவை பாயசம்
பாயாசம் என்றால் பாலில் வெந்த அன்னம் என்று பொருள் . காதி பவனில் வாங்கிய வருத்த கோதுமை சேவையில் பாயாசம் தயாரித்தேன் . சேவை மிகவும் மெல்லியது. கொதிக்கும் பாலில் 10 நிமிடம் ஊற வைய்தேன், வெந்துவிட்டது. இனிப்பிர்க்கு அகாவி நெக்டர், அதிமதுரம், தேங்காய் பால். வாசனைக்கு ஜாதிக்காய், ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. வறுத்த முந்திரி, திராட்சை போட்டு அலங்கரித்தேன். சுவைத்து பரிமாறினேன்.#book #kothumai Lakshmi Sridharan Ph D -
-
மாம்பழ கேசரி
#3mமாம்பழம் மிகவும் விருப்பமான பழம் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 மாம்பழ மரங்கள் உண்டு. மாம்பழ சீசன் ஏன்றால் கொண்டாட்டாம். அம்மா செய்யும் கேசரி மிகவும் சுவை. முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் ஏராளமான விட்டமின். ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். கேசர் மாம்பழத்தில் கேசரி செய்தேன் Lakshmi Sridharan Ph D -
அப்ஸைட் டவுன் ஆரஞ்சு கேக் (Upside down orange cake)
#ctஎங்கள் தோட்டத்திலிரிந்து பறித்த மிகவும் இனிப்பான பழங்கள் (Tangerine) 2 வித பழங்கள் சேர்ந்த கேக். முதல் முறை செய்தேன். அழகாகவும், சுவையாகவும் இருந்தது. Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்