ஈயச்சொம்பு ரசம்

Vijayalakshmi Shankar
Vijayalakshmi Shankar @cook_21671029

ஈயச்சொம்பு என்பது பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் இருக்கும் .இது வெண் ஈயத்தால் ஆனது .
இது அனேகமாக கும்பகோணத்தில் தான் கிடைக்கும் .
இதற்கே (ஈயச்சொம்பிற்கே )ஒரு சுவை உண்டு .இந்தச் சுவை நமது ரசத்தை மேலும் சுவையுள்ளதாக ஆக்கும்.
எல்லோரும் இந்த ருசியான ரசத்தை சுவைத்து
அனுபவியுங்கள்.
#rukusdiarycontest

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 Mins
4 பரிமாறுவது
  1. எலுமிச்ச பழ சைஸ் புளிசின்ன
  2. ஒரு பெரிய டீ ஸ்பூன்சாம்பார் பொடி
  3. தேவையான அளவுகல் உப்பு
  4. 1தக்காளி பெரியது
  5. 1/2 டீ ஸ்பூன்மிளகு
  6. 1/2 டீ ஸ்பூன்ஜீரகம்
  7. சிறிதளவுகட்டிப் பெருங்காயம்
  8. 1 மேஜைக் கரண்டிவேக வைத்த துவரம் பருப்பு
  9. 1 டீஸ்பூன்கடுகு
  10. 1/2 டீ ஸ்பூன்நெய் தாளிக்க
  11. சிறிதளவுகொத்தமல்லி, கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 Mins
  1. 1

    முதலில் ஈயச்சொம்பு எடுத்து அதில் புளியை நன்றாக கரைத்து சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயக் கட்டி போட்டு அடுப்பில் ஏற்றவும். (இதில் முக்கியமாக கவுனிக்க வேண்டியது. ஈயச் சொம்பை அப்படியே அடுப்பில் ஏற்றக் கூடாது. ஏனெனில் அது சீக்கிரமாக உருகக் கூடியது. அப்படியே ஏற்றினால் உருகி விடும்.)

  2. 2

    தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி முதலில் வைத்த புளி கரைச்சலில் போடவும்.

  3. 3

    பின்பு அதை ஒரு பத்து நிமிடங்கள் சாம்பார் பொடியின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

  4. 4

    அதில் வேக வைத்த துவரம் பருப்பை நன்றாக மைய மசித்து வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி அந்த கொதிக்கும் பாத்திரத்தில் விடவும்.

  5. 5

    பின்பு அதை கொதிக்க விடக்கூடாது. அது நுரைத்து வரும் போது மிளகையும் ஜீரகத்தையும் பொடி செய்து அதில் போடவும்.

  6. 6

    பின்பு அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி கருவேப்பிலையை கிள்ளி போடவும்.

  7. 7

    ஒரு இலுப்ப கரண்டியில் நெய் விட்டு கடுகு தாளித்து அதில் கொட்டவும்.

  8. 8

    மிகவும் சுவையான ஈயச்சொம்பு ரசம் தயார். இதை உடனே ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.அப்பொழுது தான் அதன் வாசனை போகாமல் இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Shankar
Vijayalakshmi Shankar @cook_21671029
அன்று

Similar Recipes