இஞ்சி எலுமிச்சை இம்யூனிட்டி ரசம்

Swarna Latha
Swarna Latha @latha

இஞ்சியும் எலுமிச்சையும் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லதாகும். அதனுடன் பருப்பு சேரும் போது உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கும். இந்த ரசத்தை சூப் போல குடிக்கலாம்.

இஞ்சி எலுமிச்சை இம்யூனிட்டி ரசம்

இஞ்சியும் எலுமிச்சையும் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லதாகும். அதனுடன் பருப்பு சேரும் போது உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கும். இந்த ரசத்தை சூப் போல குடிக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 ஸ்பூன்துவரம் பருப்பு
  2. 1இஞ்சி துண்டு, பூண்டு 5 பல்
  3. 1எலுமிச்சம் பழம்
  4. 2 ஸ்பூன்ரசப்பொடி
  5. 1தக்காளி ,பச்சை மிளகாய் 2
  6. சிறிதுகறிவேப்பிலை, கொத்தமல்லி
  7. சிறிதுபெருங்காயம் , கடுகு 1/2 ஸ்பூன்
  8. 1/2 ஸ்பூன்எண்ணெய்
  9. 1 ஸ்பூன்மஞ்சள் தூள்
  10. தேவையான அளவுஉப்பு, தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    துவரம் பருப்பை கழுவி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைத்து கொள்ளவும்

  2. 2

    இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை தட்டி வைக்கவும். தக்காளியை நறுக்கி கொள்ளவும்

  3. 3

    பருப்பு வெந்தவுடன் நன்றாக கரைத்து கொள்ளவும். எலுமிச்சையை சாறு எடுத்து கொள்ளவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பின் கரைத்து வைத்த பருப்பு தண்ணீர், ரசப்பொடி சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு கொதி விடவும்.

  6. 6

    ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு ஊற்றி நன்கு கலந்து விடவும். சுவையான இஞ்சி, எலுமிச்சை இம்யூனிட்டி ரசம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Swarna Latha
அன்று
I love cooking. Cooking is my passion 💞💞
மேலும் படிக்க

கமெண்ட்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
good. I make rasam every day with lime juice. I have a tree with lime fruits. I love rasam

Similar Recipes