பூண்டு குழம்பு

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

பூண்டு குழம்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1டீஸ்பூன் கடுகு
  2. 1டீஸ்பூன் வெந்தயம்
  3. 1காய்ந்த மிளகாய்
  4. 1 பிடி கருவேப்பிலை
  5. 2 குண்டு பூண்டு
  6. 10சின்ன வெங்காயம்
  7. 1தக்காளி
  8. புளி எலுமிச்சை அளவு
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
  11. 2டேபிள் ஸ்பூன் தனியாதூள்
  12. 1/4டீஸ்பூன் மிளகுத்தூள்
  13. 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பூண்டு குழம்பிற்கு வெங்காயத்தின் அளவை விட பூண்டு இரண்டு பங்கு அதிகமாக இருக்க வேண்டும்.

  2. 2

    சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு வெந்தயம் காய்ந்த மிளகாய் கருவேப்பிலை தாளித்து, அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி,மிளகாய் தூள், தனியா பொடி, மிளகுத் தூள், தேவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  4. 4

    நன்கு கொதித்து பச்சை வாசனை போன பின் கரைத்து வைத்த புளியை ஊற்றி கொதிக்க வைக்கவும்.

  5. 5

    குழம்பு கொதித்து, எண்ணெய் பிரிந்து சுண்டி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சூப்பரா இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes