சேப்பங்கிழங்கு குழம்பு (Seppankilanku kulambu recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

சேப்பங்கிழங்கு குழம்பு (Seppankilanku kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 5சேப்பங்கிழங்கு
  2. 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  3. 1/2 டீஸ்பூன் கடுகு
  4. 1காய்ந்த மிளகாய்
  5. 1 கொத்து கருவேப்பிலை
  6. 10 பல் பூண்டு
  7. 10பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
  8. 1தக்காளி
  9. 1டேபிள் ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
  10. 1டேபிள் ஸ்பூன் தனியாத்தூள்
  11. 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  12. 1/2 டீஸ்பூன் பெருங்காயம்
  13. புளி எலுமிச்சை அளவு
  14. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    சேப்பங்கிழங்கை உப்பு மஞ்சள்தூள் பெருங்காயம் சேர்த்து குக்கரில் வேக வைத்து தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக அரிந்து வைக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை தாளித்து, நசுக்கிய பூண்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து மைய வதக்கவும்.

  3. 3

    தக்காளியுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அதில் கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

  4. 4

    குழம்பு பச்சை வாசனை போனவுடன் வேகவைத்து அறிந்து வைத்துள்ள சேப்பங்கிழங்கை அதில் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். சுவையான சேப்பங்கிழங்கு குழம்பு ரெடி.

  5. 5

    கள்ள துவையல் செய்ய :- பொட்டுக்கடலை ஒரு கப், நான்கு பல் பூண்டு, 4 காய்ந்த மிளகாய் தேவைக்கேற்ப உப்பு, ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்து எடுத்தால் கள்ள துவையல் ரெடி.

  6. 6

    இந்தத் துவையலை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து இந்த குழம்பு உடன் சாப்பிடும்போது மிகவும் ருசியாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes