கருவேப்பிலை குழம்பு

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#Lockdown2
#goldenapron3
லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க .

கருவேப்பிலை குழம்பு

#Lockdown2
#goldenapron3
லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40Mins
2 பரிமாறுவது
  1. கருவேப்பிலை
  2. 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவியது
  3. 1டீஸ்பூன் கடலை பருப்பு
  4. 1 1/2டீஸ்பூன் மிளகு
  5. 1 டேபிள் ஸ்பூன் தனியா
  6. 4 வரமிளகாய்
  7. 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. புளி சிறிய எலுமிச்சை அளவு
  9. 1 முழு பூண்டு
  10. 20 சின்ன வெங்காயம்
  11. நல்லெண்ணெய் 2 குழி கரண்டி
  12. தாளிக்க
  13. 1டீஸ்பூன் கடுகு
  14. 1 வரமிளகாய்

சமையல் குறிப்புகள்

40Mins
  1. 1

    கருவேப்பிலை கழுவி வைக்கவும்.மிளகு 1 1/2 டீஸ்பூன்,தனியா 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் வரமிளகாய் 4,தேங்காய் துருவியது 2 டேபிள் ஸ்பூன், புளி சிறிய எலுமிச்சை அளவு,உப்பு எடுத்து வைக்கவும்.1 முழு பூண்டு,20 சின்ன வெங்காயம் தோல் நீக்கி கழுவி இரண்டாக நறுக்கி வைக்கவும்.

  2. 2

    கடாயில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடலை பருப்பு,தனியா,தேங்காய் துருவல்,வரமிளகாய்,புளி மஞ்சள் தூள், மிளகு வறுத்து,ஆறவிட்டு மிக்ஸியில் சேர்க்கவும்.அதே கடாயில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கழுவிய கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வதக்கியதையும் மிக்ஸியில் சேர்த்து வைக்கவும்.

  3. 3

    ஆறவிட்டு அரைத்து வைக்கவும். கடாயில் 1 குழி கரண்டி நல்லெண்ணெய் விட்டு கடுகு 1 டீஸ்பூன்,வரமிளகாய் 1 தாளித்து நறுக்கிய பூண்டு வெங்காயம் நன்கு வதக்கி உப்பு சேர்க்கவும்.

  4. 4

    அரைத்த விழுது சேர்த்து கலக்கி விடவும்.அடுப்பை சிம்மில் வைத்து தட்டு போட்டு மூடி வைக்கவும்.அடிக்கடி திறந்து கிளறி விடவும்.

  5. 5

    ஊற்றிய நல்லெண்ணெய் மேலே கக்கி வரும் வரை கிளறி விடவும்.சுவையான கருவேப்பிலை குழம்பு ரெடி.சாதத்துடன் வெந்த துவரம் பருப்பு அல்லது உடைத்த கடலை துவையலுடன் கருவேப்பிலை குழம்பு வைத்து சாப்பிடலாம்.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes