மசாலா தோசை (Masala dosai recipe in tamil)

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685

மசாலா தோசை (Masala dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 3வேக வைத்த உருளைக்கிழங்கு - பொடி துண்டுகளாக மசித்து கொள்ளவும்
  2. 1பெரிய வெங்காயம் - பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. 4பூண்டு பற்கள்- பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை
  6. ஒரு கொத்து கருவேப்பில்லை
  7. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  9. 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  10. ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
  11. தேவையானஅளவு உப்பு
  12. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  13. 1/4டீஸ்பூன் கடுகு
  14. 1/4டீஸ்பூன் சீரகம்
  15. 1/4டீஸ்பூன்பெருஞ்சீரகம்
  16. 1 கப் தோசை மாவு
  17. 2 டேபிள் ஸ்பூன் நெய்/பட்டர்
  18. 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள்
  19. 1/4 டீஸ்பூன்பாவ் பாஜி மசாலா தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, சீரகம், பெருஞ்சீரகம் சேர்க்கவும்.

  2. 2

    பின்பு மிளகாய், நறுக்கிய வெங்காயம், பூண்டு பற்கள், கருவேப்பில்லை மற்றும் கொத்த மல்லி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங் காயத்தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கிளறவும்.

  4. 4

    பின்பு வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறி  வதக்கி மசாலாவை தயார் செய்யவும்.

  5. 5

    பிறகு தோசை கல்லை சூடாக்கி, ஒரு கரண்டி தோசை மாவை ஊற்றி தேய்க்கவும்.

  6. 6

    ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, சிறிது மிளகாய் தூள் மற்றும் பாவ் பாஜி மசாலா தூள் தூவி விடவும்.

  7. 7

    அதன் பின் தயார் செய்த உருளைக்கிழங்கு மசாலாவை தோசையின் நடுவில் வைத்து மேலும் ஒரு ஸ்பூன் நெய் தெளித்து சூடாக பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
அன்று

Similar Recipes