மசூர் முள்ளங்கி சாம்பார் (Mashoor mullanki dhal recipe in tamil)

#arusuvai5
வழக்கமாக நாம் சாம்பார் செய்யும்போது துவரம்பருப்பை பயன்படுத்துவோம். ஒரு மாறுதலுக்காக நான் மசூர் பருப்பை பயன்படுத்தி முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளேன். சுவை வித்தியாசமாக உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கப் அளவிற்கு மசூர் பருப்பை எடுத்து கழுவிக் கொள்ளவும். ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் ஐந்து சவுண்ட் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக் கொள்ளவும். முள்ளங்கி படத்தில் காட்டியுள்ளபடி வட்டமாக அறிந்து கொள்ளவும். ரெண்டு மீடியம் சைஸ் வெங்காயம் அறிந்து வைத்துக் கொள்ளவும். ஒரு தக்காளியை நான்காக அரிந்து கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு முள்ளங்கியை முதலில் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பிறகு வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதன் பிறகு நான்காக வெட்டிய தக்காளியை சேர்த்து வதக்கவும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து மூன்று ஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்து கலந்து விட்டு வேகவைத்த மசூர் பருப்பை அதன் தண்ணீருடன் சேர்த்து காயை வேக விடவும்.
- 3
காய் நன்கு வெந்தவுடன் அரைத்த புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும்.
- 4
இப்போது கடுகு, உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், 2 வரமிளகாய் தாளித்து குழம்பில் சேர்க்கவும் ஒரு ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளவும். பொடியாக அரிந்த கொத்தமல்லி தழையை சேர்த்துக் கொள்ளவும்.நன்கு கொதிக்க விடவும். மைசூர் பருப்பு முள்ளங்கி சாம்பார் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
முள்ளங்கி உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்க கூடிய காய்கறி. வாரம் ஒரு முறை முள்ளங்கியை சமையலில் பயன்படுத்தவும். #அறுசுவை5 Siva Sankari -
-
இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்... Muniswari G -
மசூர் பருப்பு, முட்டைக்கோஸ் (Masoor dal Cabbage sambar recipe in tamil)
மசூர் பருப்பு மிக விரைவில் வேகும் ஒரு பருப்பு. நல்ல சுவை உடையது. விருந்தினர் வரும் போது மிக விரைவாக சாம்பார் செய்யலாம்.#Jan1 Renukabala -
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#arusuvai2முள்ளங்கி நீர் சத்து அதிகம் கொண்டது. வாரம் ஒருமுறை முள்ளங்கி எடுத்து கொண்டால் உடல் எடையை குறைக்க உதவும். Sahana D -
-
இறால் முள்ளங்கி மசாலா (Iraal mullanki masala recipe in tamil)
என் பாட்டியின் சமையல் இறால் முள்ளங்கி மசாலா நீங்கள் செய்து பாருங்கள் முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட இது மிகவும் பிடிக்கும். #arusuvai5 Vaishnavi @ DroolSome -
-
முள்ளங்கி கிரேவி (Mullanki gravy recipe in tamil)
#arusuvai5நீர் சத்து நிறைந்த முள்ளங்கி உடம்புக்கு நல்லது. உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது. Sahana D -
-
துவரம் பருப்பு முள்ளங்கி சாம்பார் (Thuvaram Paruppu Mullangi Sambar Recipe in Tamil)
#Jan1*எந்தவொரு இந்திய சமையலறையிலும் புரதம் நிறைந்த துவரம் பருப்பு ஒரு பிரதான உணவாகும். இது அரிசி அல்லது சப்பாத்தியுடன் சுவையான துணையை உருவாக்குகிறது மற்றும் இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.ஃபோலிக் அமிலம் நிறைந்ததால், துவரம் பருப்பு தமிழகம் முழுவதும் பல உணவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.அதிலும் சாம்பார் என்றாலே துவரம் பருப்பு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள். kavi murali -
முள்ளங்கி சுண்டல்குழம்பு (Mullanki sundal kulambu recipe in tamil)
இந்தக் குழம்பு தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும்.கத்தரிக்காய் அலர்ஜியாக உள்ளவர்களுக்கு சுண்டல் உடன் முள்ளங்கி சேரத்த இந்தக் குழம்பு நல்லது மற்றும் சுவையானது Siva Sankari -
முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
#arusuvai5 முள்ளங்கியில் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. கல்லீரல் மற்றும் பித்தப்பையை சுத்தம் செய்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும். BhuviKannan @ BK Vlogs -
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#Ownrecipeநன்மைகள்.முள்ளங்கியின் ஒருவிதமான ஸ்மல் யாருக்கும் பிடிக்காது ஆகவே முள்ளங்கியை பயன்படுத்த மிகவும் யோசிப்பார்கள் ஆனால் இப்படி நாம் நன்றாக எண்ணெயில் வதக்கி துவையல் செய்யும் போது மிகவும் சுவையாக உள்ளது அனைவரும் விரும்பி சாப்பிடுவர் Sangaraeswari Sangaran -
-
சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு (Suraikkaai thattapayaru kulambu recipe in tamil)
#arusuvai5 Meena Ramesh -
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari -
உள்ளிபாயா பச்சடி 🍗 (Ulli paayaa pachadi recipe in tamil)
#apகேரள மக்கள் உணவில் காய்கறிகள் அதிகம் இருக்கும். ஆந்திரா மக்கள் உணவு வகைகள் மிகவும் காரசாரமாக இருக்கும். இந்திய மாநிலங்களில் மொழி,பண்பாடு, கலாச்சாரங்கள் மாறுபட்டு இருப்பது போலவே உணவு பழக்கங்களும் மாறுபட்டவை.ஆனாலும்,ஒவ்வொரு மாநில மக்களும் பிற மாநிலத்தவர் உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள்.உலகம் முழுவதிலும் நம் இந்தியர்களின் எல்லா உணவுகளும் பிரத்யோகமாக கிடைக்கும்.அந்த அளவிற்கு இந்தியரின் உணவு வகைகள்,பாரம்பரிய ருசி கொண்டவை. அதுவும் நம் தமிழ்நாடு ஒரு படி மேல். மாவட்டம் வாரியாக புகழ் பெற்ற உணவு வகைகள் உண்டு.திருநெல்வேலி,காரைக்குடி, கும்பகோணம் காஞ்சீபுரம் என்று சொல்லி கொண்டே போகலாம்.இட்லி,சாம்பார்,பொங்கல்,வடைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.ஆந்திரா கோங்குரா சட்னி,கேரள புட்டு_ கடலை குழம்பு,கர்நாடகா மைசூர் மசால் தோசை இப்படி சொல்லி கொண்டே போகலாம். Meena Ramesh -
-
-
-
ரோசாப்பூ சட்னி/onion (Rosapoo chutney Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 # bookஇந்த ரோசாப்பூ சட்னி செட்டிநாடு வகை சட்னி ஆகும். என்னுடைய அம்மா எனக்கு பிடிக்கும் என்றுசெய்து தருவார்கள். எனக்கு இதன் செய்முறை தெரியாது. 32 வருடங்களுக்குப் பிறகு மும்பையில் உள்ள என் கல்லூரி தோழி மூலம் இதன் செய்முறையை தெரிந்து கொண்டேன்.தக்காளியில் விட்டமின் ஏ 16% விட்டமின் சி 22% விட்டமின் பி 5% உள்ளது மற்றும் இரும்பு கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளது சோடியம் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளது உள்ளது. தக்காளியில் ஜூஸ் மற்றும் சாஸ் பொருட்களை தயாரிக்கலாம். மற்றும் தக்காளி பொருட்கள் இதய நோய் மற்றும் பல புற்று நோய்களின் அபாயத்தை குறைக்கிறது இந்த பழம் சரும ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இது வெயிலில் இருந்து பாதுகாக்கும்.தக்காளியுடன் வெங்காயம் சேர்த்து செய்த சட்னி ஆகும் இது இட்லி தோசை மற்றும் சப்பாத்திக்கு சுவையாக இருக்கும். Meena Ramesh -
திடீர் தக்காளி சாம்பார்🍅 (Thideer thakkaali sambar recipe in tamil)
#arusuvai4எளிதாக மிக விரைவில் செய்து விட கூடிய சாம்பார். இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.செய்யும் போது தேவை என்றால் கசகசா மற்றும் பொட்டு கடலை சேர்த்து கொள்ளுங்கள்.நான் சேர்க்கவில்லை. Meena Ramesh -
-
முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)
முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு ருசியாக இருக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்தால் முள்ளங்கி சாம்பார் மிகவும் ருசியாக கிடைக்கும் Banumathi K -
-
முருங்கக்காய்,கத்தரிக்காய் மசாலா கூட்டு (Murunkaikaai, kathirikkaai masala kootu recipe in tamil)
#coconutஎனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல காரத்துடன் செய்து சுட சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் வாய்க்கு மிகவும் ருசியாக இருக்கும்.😋😛 Meena Ramesh -
கமெண்ட் (5)