மாம்பழம் ஐஸ் கிரீம்

Rasi Rusi Arusuvai
Rasi Rusi Arusuvai @cook_24629931

இதை மட்டும் நீங்க ஒரு தடவை வீட்டில் செய்துசாப்பிட்டால், கடைக்கு சென்று ஐஸ் கிரீம் வாங்கவே மாட்டேங்க

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

செய்வதற்கு அரை மணி நேரம்
பத்து பேர்
  1. கெட்டியான பால் ஒரு லிட்டர்
  2. கார்ன்ஃப்ளார் ஒரு டேபிள்ஸ்பூன்
  3. மாம்பழம் முக்கால் கிலோ
  4. சர்க்கரை எட்டிலிருந்து பத்து டேபிள் ஸ்பூன்
  5. பாலாடை அரை கப்

சமையல் குறிப்புகள்

செய்வதற்கு அரை மணி நேரம்
  1. 1

    ஒரு லிட்டர் பாலை தண்ணீர் கலக்காமல் அரை லிட்டராக வரும் வரை சுண்டக்காய்ச்சி கொள்ளவும். அதனுடன் எட்டில் இருந்து 10 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொள்ளவும். அதிலிருந்து 4 டேபிள் ஸ்பூன் பாலை எடுத்து அதனுடன் 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். அதன்பிறகு கொதித்துக் கொண்டிருக்கும் பாலுடன் கரைத்து வைத்துள்ள கார்ன்ஃப்ளார் கரைசலை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் கலந்துவிட்ட பின் நன்றாக ஆறவிடவும்.

  2. 2

    மாம்பழத்தை தோல் நீக்கி மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் நாம் ஆற வைத்து இருந்த பாலையும் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும் அதன் பிறகு பாலாடை சேர்த்து அடித்துக் கொள்ளவும். பாலாடை சேர்த்தபின் நன்றாக அடிக்க தேவையில்லை. இப்போது அடித்து வைத்த கலவையை காற்றுப்புகாத ஒரு குடுவையில் ஊற்றி நான்கு மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பதப்படுத்தும். அதன் பிறகு எடுத்து மிக்ஸியில் மீண்டும் அடித்து மீண்டும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பதப்படுத்தி கொள்ளவும். இவ்வாறாக இரண்டு மூன்று முறை செய்து கொள்ளவும்.

  3. 3

    இரண்டு மூன்று முறை அடித்து முடித்த பிறகு ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது பிளாஸ்டிக் கவர் போன்ற ஏதாவது ஒரு கவரை ஐஸ்க்ரீம் மேலே வைத்து அதன் மேல் மூடியை போட்டு மூடி, முழுஇரவு குளிர்சாதன பெட்டியில் விட்டு விடவும், காலையில் ஜில்லென்ற குளுகுளு ஐஸ்கிரீம் நாம் சாப்பிட அருமையான சுவையில், கடையின் சுவைபோல தயாராகிவிடும். செய்து பார்த்துவிட்டு நன்றாக இருந்தால், ரசி ருசி அறுசுவை யூட்யூப் சேனலின் நேயர்கள் ஆக இணைந்து விடுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Rasi Rusi Arusuvai
Rasi Rusi Arusuvai @cook_24629931
அன்று

Similar Recipes