பரோட்டா சால்னா

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

பரோட்டா சால்னா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40mins
2 பரிமாறுவது
  1. 2கப் மைதா
  2. உப்பு
  3. 1டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  4. தேவையானஅளவு ஆயில்

சமையல் குறிப்புகள்

40mins
  1. 1

    2 கப் மைதா மாவை சலித்து எடுத்து வைத்துக்கொண்டு அதில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து தேவையான அளவு உப்பு எண்ணெய் சேர்த்து வைக்கவும்.

  2. 2

    சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி மாவை கெட்டியாக பிசைந்து வைக்கவும்.மேலே எண்ணெய் தடவி மூடி வைக்கவும். 2 மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் மாவு மிகவும் மிருதுவாக இருக்கும்.

  3. 3

    மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து எண்ணெய் தடவி வைத்து சப்பாத்தி தேய்க்கும் கல்லில் மெலிசாக தேய்த்து எண்ணெய் நடுவில் 1/2 டீஸ்பூன் தடவி அதை சுருட்டி வைக்கவும்.

  4. 4

    இவ்வாறு மீதமுள்ள மைதாமாவு உருண்டை களையும் திரட்டி உருட்டி வைக்கவும்.சுருட்டி வைத்த மாவின் மேலே சிறிது எண்ணெய் விட்டு அதை சப்பாத்தி தேய்க்கும் கல்லில் தேய்க்கவும்.

  5. 5

    தோசைக்கல்லில் பரோட்டா மாவை சேர்த்து இருபுறமும் சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். நான்கு பரோட்டாக்களை தோசைக்கல்லில் போட்டு எடுத்த உடன் அதை நம் இரண்டு கைகளால் நன்றாக தட்டி வைக்கவும்.இவ்வாறு தட்டினால் பரோட்டா லேயர் லேயராக வரும்.

  6. 6

    சுவையான முட்டை சேர்க்காத சைவ பரோட்டா ரெடி.😋😋 பரோட்டாவிற்கு சால்னா செய்தேன். சுவையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes