வெள்ளை பூசணி மோர் குழம்பு (hotel style white pumpkin butter milk curry)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

நிறைய வெஜிடேரியன் ஹோட்டலில் மதிய உணவில் மோர் குழம்பு பரிமாறுகிது. அதை நீங்கள் வீட்டிலேயே செய்ய இதோ வெள்ளை பூசணி மோர்க்குழம்பு.
#hotel

வெள்ளை பூசணி மோர் குழம்பு (hotel style white pumpkin butter milk curry)

நிறைய வெஜிடேரியன் ஹோட்டலில் மதிய உணவில் மோர் குழம்பு பரிமாறுகிது. அதை நீங்கள் வீட்டிலேயே செய்ய இதோ வெள்ளை பூசணி மோர்க்குழம்பு.
#hotel

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
6பேர்
  1. 2 கப் புளித்த கெட்டியான தயிர்
  2. விழுது அரைப்பதற்கு :
  3. 4 பச்சை மிளகாய்
  4. ஒரு சிறிய துண்டு இஞ்சி
  5. 1 டீஸ்பூன் சீரகம்
  6. 1டீஸ்பூன் துவரம் பருப்பு
  7. 1/4 கப் துருவிய தேங்காய்
  8. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. உப்பு தேவையான அளவு
  10. தாளிக்க :
  11. 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணை (விருப்பப்படி)
  12. 1/4 டீஸ்பூன் கடுகு
  13. 1/4 டீஸ்பூன் சீரகம்
  14. 2 வற்றல் மிளகாய்
  15. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    ஒரு அகலமான பாத்திரத்தில் நல்ல கெட்டியான தயிரை எடுத்து பீட்டர் வைத்து நன்கு கடைந்து மோர் செய்து, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

  2. 2

    வெள்ளை பூசணியை சிறிய துண்டுகளாக நறுக்கி, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேகவைத்து வைக்கவும். (அதிகநேரம் வேக விட்டால் குழைத்து போகும்)

  3. 3

    துவரம் பருப்பை தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊறவைத்து அரைக்க சேர்க்கவும்.

  4. 4

    மிக்ஸியில் சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, ஊற வைத்து வைத்துள்ள துவரம் பருப்பு, தேங்காய் துருவல், கறிவேப்பிலை, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.

  5. 5

    வேறு ஒரு பாத்திரத்தை சூடு செய்து, அரைத்து வைத்துள்ள விழுது, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க ஆரம்பித்தவுடன், வேகவைத்து வைத்துள்ள பூசணி துண்டுகளை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிடவும்.

  6. 6

    பின்னர் கடைந்து வைத்துள்ள மோர் சேர்த்து, நுரைத்து மேலே வரும் போது உப்பு சரிபார்த்து இறக்கி, தேங்காய் எண்ணையில் கடுகு, சீரகம், வற்றல் மிளகாய், கறிவேப்பிலை தாளித்து சேர்த்தால் சுவையான ஹோட்டல் மோர் குழம்பு சுவைக்கத்தயார்.

  7. 7

    இந்த சுவையான வெள்ளை பூசணி மோர் குழம்பு, மதிய உணவில் ஹோட்டலில் பரிமாறுவார்கள். இதே முறையில் அனைவரும் செய்து சுவைக்கவும்.

  8. 8

    தென் இந்திய திருமண மதிய உணவாகவும், குறிப்பாக கேரளாவில் இந்த குழம்பு எல்லா விசேஷங்களிலும் உபயோகிக்கிறார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes