சேப்பங்கிழங்கு அன்னாசி மோர் குழம்பு (Seppakilanku annaasi morkul

#Kerala #photo
மோர்குழம்பு கேரளாவில் மிகவும் முக்கியமான உணவாகும்.பெரும்பாலும் கேரள மக்கள் அனைவரும் மதிய உணவில் காய்கறிகள் சேர்த்து மோர் குழம்பு வைப்பார்கள். அதேபோல் கிழங்கு வகைகளும் அதிகம் சேர்த்துக் கொள்வார்கள்.இன்று அவர்கள் செய்யும் முறையில் சேப்பங்கிழங்கு மற்றும் அன்னாசி பழம் சேர்த்து இந்த மோர் குழம்பு செய்தேன்.
சேப்பங்கிழங்கு அன்னாசி மோர் குழம்பு (Seppakilanku annaasi morkul
#Kerala #photo
மோர்குழம்பு கேரளாவில் மிகவும் முக்கியமான உணவாகும்.பெரும்பாலும் கேரள மக்கள் அனைவரும் மதிய உணவில் காய்கறிகள் சேர்த்து மோர் குழம்பு வைப்பார்கள். அதேபோல் கிழங்கு வகைகளும் அதிகம் சேர்த்துக் கொள்வார்கள்.இன்று அவர்கள் செய்யும் முறையில் சேப்பங்கிழங்கு மற்றும் அன்னாசி பழம் சேர்த்து இந்த மோர் குழம்பு செய்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் தயிரை கடைந்து கொள்ளவும். ரெண்டு ஸ்பூன் வரக்கொத்தமல்லி, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு மூன்றையும் தண்ணீரில் கழுவி கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.அரைக்க தேங்காய் துருவல், 8 சின்ன வெங்காயம், 5 பச்சைமிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, இரண்டு ஸ்பூன் சீரகம் எடுத்து வைத்துக் கொள்ளவும். தாளிக்கத் தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை வாசம் வர வறுத்துக்கொள்ளவும். பிறகு இவற்றுடன் தேங்காய் மற்றும் ஊறிய பருப்புகள்,வர கொத்தமல்லி சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம் அரை ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து மீண்டும் ஒருமுறை நைசாக அரைத்துக் கொள்ளவும். இந்த தேங்காய் விழுதை தனியாக எடுத்து வைத்துவிட்டு எட்டு சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாக மிக்ஸியில் ஒட்டிக் கொள்ளவும்.
- 3
இந்த அரைத்த விழுது மற்றும் வெங்காயம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து கொள்ளவும். மிக்ஸி கழுவிய தண்ணிரை மோரில் கலந்து கொள்ளவும். உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். இதற்கிடையில் சேப்பங்கிழங்கை தோல் சீவி சிறிய அளவில் அறிந்து கொள்ளவும். அன்னாசி பழத் துண்டுகளையும் சேப்பன் துண்டுகளையும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து நன்கு வேகவிடவும்.
- 4
அடுப்பில் மோர் குழம்பு கலவையை வைத்து கொதிக்க விடவும். கொதி வர ஆரம்பித்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும். வேகவைத்த கிழங்கு மற்றும் அன்னாசி துண்டுகளை ஆறவைத்து மோர்க் குழம்பில் சேர்க்கவும். ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், சீரகம்,வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தாளிப்பு மோர்க் குழம்பில் சேர்த்து கலந்து விடவும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
- 5
சுவையான சேப்பங்கிழங்கு அன்னாசி கேரளா ஸ்டைல் மோர் குழம்பு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மோர் குழம்பு
#lockdown 2 #bookஇந்த ஊரடங்கு நேரத்தில் இன்று என்ன செய்ய என்று யோசித்த போது மோர் நிறைய இருந்த காரணத்தினால் மோர் குழம்பு செய்வது என முடிவு செய்தேன். வெண் பூசணி போட்டு செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை. அதனால் வெறும் மோர் குழம்பு மட்டும் செய்தேன். உருளைக்கிழங்கு இருந்தது. அதை தொட்டு கொள்ள செய்தேன். Meena Ramesh -
பிந்தி மோர் குழம்பு
#goldenapron3 # nutrient1வெண்டைக்காய் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. ஞாபக சக்தி தரக்கூடிய சத்தான காய் ஆகும். வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. மலச்சிக்கல் போக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும். சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. எதிர்ப்பு சக்தி திறன் உடையது. மோரில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இந்த மோர் குழம்பில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்ப்பதால் புரோட்டின் சக்தி கிடைக்கும். Meena Ramesh -
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh -
மோர் குழம்பு கேரளா ஸ்டைல் (Mor kulambu recipe in tamil)
#kerala # photo மோர் குழம்பு மிகவும் எளிமையான முறையில் தயாரிக்கலாம் இவற்றுடன் வாழைக்காய் வெள்ளை பூசணி போன்ற காய்கறிகள் சேர்த்து தயார் செய்யலாம் Siva Sankari -
-
-
சேப்பங்கிழங்கு மோர் குழம்பு
#kilanguஎனக்கு விருப்பமான கிழங்குகளில் சேப்பங்கிழங்கு ஒன்று. மோர் குழம்பு செய்வதற்க்கு ஏற்ற குழம்பு. குழம்புக்கு புரதம் சேர்க்க, குழம்பாய் கெட்டியாக்க எப்பொழுதும் வேகவைத்த பயத்தம் பருப்பை சேர்ப்பேன். தேங்காய் பேஸ்ட் பொருட்களில் ஒன்று. சத்து சுவை நிறைந்த சேப்பங்கிழங்கு மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
வெள்ளை பூசணி மோர் குழம்பு (hotel style white pumpkin butter milk curry)
நிறைய வெஜிடேரியன் ஹோட்டலில் மதிய உணவில் மோர் குழம்பு பரிமாறுகிது. அதை நீங்கள் வீட்டிலேயே செய்ய இதோ வெள்ளை பூசணி மோர்க்குழம்பு.#hotel Renukabala -
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
கீரை மோர் குழம்பு (Green leaves buttermilk gravy recipe in tamil)
மோர் குழம்பு நிறைய காய்கறிகள் வைத்து செய்யலாம். நான் தண்டங்கீரைசேர்த்து செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#CF5 Renukabala -
கத்தரிக்காய் மோர் குழம்பு(brinjal mor kulambu recipe in tamil)
#cf5மோர்க் குழம்பில் கத்திரிக்காய் வேகவைத்து சேர்த்து மோர் குழம்பு வைத்தால் சுவையாக இருக்கும் மோர்க் குழம்பில் கத்திரிக்காய் சேர்த்து செய்துள்ளேன். Meena Ramesh -
மோர் வடை
Lock-down recipe., வெளியில் கடைகளில் எதுவும் வாங்கி சாப்பிட முடியாத நேரம்.ஆகையால் வீட்டிலேயே சுவையான மோர் வடை செய்தேன். சுவையாக இருந்தது செய்துபாருங்கள். Soundari Rathinavel -
-
வெண்டக்கை மோர் குழம்பு (vendaikkai mor kulambu recipe in Tamil)
#bookதயிர் வீட்டில் அதிகம் மீதமானால் அதை மோர் குழம்பு செய்து பாருங்கள் உடனே தீர்ந்துவிடும். கோடை காலத்தில் மோர் குழம்பு உணவில் சேர்த்தால் மிகவும் உடலுக்கு நல்லது Aishwarya Rangan -
வேர்க்கடலை குழம்பு
# bookவேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.அன்றாடம் நமது உணவில் ஒரு கை பிடி வேர்க்கடலை வேகவைத்தது சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லதுஎங்கள் வீட்டில் அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு இந்த முறையில் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
வெண்டைக்காய் மோர் குழம்பு
#cookwithmilkபாரம்பரிய முறையில் சுவையான மோர் குழம்பு எப்படி செய்வது வாங்க பார்க்கலாம்.. Saiva Virunthu -
வெள்ளை பூசணிக்காய் மோர் குழம்பு
மோர் பிடிக்காதவர்கள் கூட இந்த மோர் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
வெங்காயத்தாள் காலிஃப்ளவர் மசாலா(spring onion,cauliflower masala in Tamil)
*காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.*வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.இவை இரண்டும் கலந்து நாம் உணவாக செய்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டாக்கும்.#Ilovecooking kavi murali -
கருவேப்பிலை குழம்பு
#Lockdown2#goldenapron3லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க . Shyamala Senthil -
கத்தரிக்காய் கூட்டு🍆🍆
#book கத்தரிக்காயில் செய்யப்படும் இந்த கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். என்னுடைய அம்மாவின் ஃபேவரிட் ரெசிபி இது. எனக்கு பிடிக்கும் என்பதால் அடிக்கடி இதை எனக்கு செய்து கொடுப்பார். உப்பு நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் சாதம் மோர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். 😋😍 Meena Ramesh -
நாட்டு காய்கறி புளிக் குழம்பு
#bookஇந்த புளிக்குழம்பு எங்கள் பக்கம் விரத சமையல் அன்று செய்யப்படுவதாகும் .மேலும் இதில் நாட்டுக் காய்கறிகள் எதை வேண்டுமானாலும் கலந்து செய்யலாம். வெண்டைக்காய் முக்கியமாக சேர்க்க வேண்டும். இந்த குழம்பிற்கு வெங்காயம், தக்காளி, பூண்டு எதுவும் தேவையில்லை. வெறும் காய்கறிகளை மட்டும் கலந்து செய்யலாம். Meena Ramesh -
கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)
பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.#magazine2 Renukabala -
கேரள மத்திமீன் குழம்பு (Kerala matthi meen kulambu recipe in tamil)
கேரள மக்கள் மீன் குழம்பு வகைகளை விரும்பி சாப்பிடுவர் ,அதிலும் மத்திமீனைஅடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வர்.ஒமேகா3 பேட்டிஏசிட்,இதயத்திற்கு மிகவும் ஹெல்த்தியான உணவு. #kerala Azhagammai Ramanathan -
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
முட்டை விரும்பாத குழந்தைகளுக்கு இதுபோன்று முட்டை குழம்பு செய்து தந்தால் விரும்பி உண்ணுவார்கள் Cookingf4 u subarna -
தஹி பராத்தா (dahi paratha)/curd
#goldenapron3 #book #lockdown2மதிய உணவிற்கு சமைக்க காய் கறிகள் இல்லை. தீர்ந்து விட்டது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் நினைத்த நேரத்தில் வெளியே செல்ல முடியாது.அதனால் வீட்டில் இருந்த கோதுமை மாவை வைத்து ஒரு கப் தயிர் பயன்படுத்தி இந்த தயிர் பராத்தா செய்தேன். மிகவும் மிருதுவாக இருந்தது.கூட மசாலா பொருட்கள் சேர்த்து செய்தேன். மணமும் சுவையும் அருமையாக இருந்தது. Meena Ramesh -
கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍 Meena Ramesh -
-
கறிவேப்பிலை குழம்பு
#மதிய உணவுகறிவேப்பிலையை சமையலில் சேர்க்கும் போது அதைப் பொதுவாக யாரும் சாப்பிடுவது கிடையாது. அதனால் கறிவேப்பிலை குழம்பு செய்து சாப்பிடும் பொழுது கறிவேப்பிலையின் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும். மிகவும் சுவையான, சத்தான குழம்பு. Natchiyar Sivasailam -
பாகற்காய் பொரியல்
#bookபாகற்காய் கசக்கும் என்றாலும், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக நல்லது. வயிற்றில் பூச்சித் தொந்தரவு இருந்தாலும் பாகற்காயை சாப்பிட்டால் சரியாகிவிடும். Meena Ramesh -
More Recipes
கமெண்ட் (4)