மீதமான சாதத்தில் புளியோதரை

Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497

#leftover சாதம் மீதமானால் கவலை வேண்டாம், அதை மறுநாள் சமையலாக மாற்றிக் கொள்ளலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
4  பேர்
  1. புளிக்கரைசல் ஒரு கப்
  2. பூண்டுப்பல் 10
  3. நிலக்கடலை 50 கிராம்
  4. காஞ்ச மிளகாய் 5
  5. வறுத்து அரைக்க ஒரு ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் வெந்தயம், அரை ஸ்பூன் எள்ளு, அரை ஸ்பூன் கடலைப்பருப்பு, நான்கு காஞ்ச மிளகாய்
  6. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதல்நாள் மீதமான சாதத்தை எடுத்து பிரிட்ஜில் வைக்கவும். மறுநாள் அதை வெளியே எடுத்து ஒரு மணி நேரம் வைக்கவும். பின்பு வெறும் கடாயில் மிளகு வெந்தயம் கடலைப்பருப்பு முழு மல்லி காய்ஞ்ச மிளகாய், இவற்றை ஒரு நிமிடம் வறுத்து எடுக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வரமிளகாய் கடலைப்பருப்பு போட்டு பொரியவிடவும், பின்பு அதனுடன் பூண்டு பல்லை சேர்க்கவும், பிறகு அதனுடன் நிலக்கடலையை சேர்த்து நன்கு வதக்கவும்,

  3. 3

    வதங்கியவுடன் புளி கரைசலை சேர்க்கவும், பிறகு சிறிதளவு மஞ்சள் தூள் சேர்க்கவும், நன்றாக கொதிக்க விடவும்.

  4. 4

    நன்றாக கொதித்து புளிக்கரைசல் கெட்டியாக வந்தபின்பு அதனுடன் ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்க்கவும்,

  5. 5

    அடுப்பை அணைத்து விட்டு கீழே இறக்கியவுடன் வறுத்து அரைத்த புளியோதரை பொடியை சேர்க்கவும்.

  6. 6

    சாதத்தை எடுத்து அதனுடன் இந்த புளிக்கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அதனுடன் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கிளறவும்.

  7. 7

    இப்பொழுது மிகவும் சுவையான புளியோதரை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497
அன்று

Similar Recipes