தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
நான்கு பேர்கள்
  1. காளான் 1பாக்கெட்
  2. கேரட் 3
  3. வெண்ணெய்4டேபிள் ஸ்பூன்
  4. பெரிய வெங்காயம் 2
  5. மிளகுத்தூள் தேவையான அளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. கான்பிளவர் 2டேபிள் ஸ்பூன்
  8. பூண்டு6பற்கள்
  9. பால் அரைக்கப்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாக்கெட் காளான்ல கால்வாசி சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.கேரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    முக்கால் அளவு காளானை பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு இரண்டு பெரிய வெங்காயத்தை பெரியதாக வெட்டிக் கொள்ளுங்கள். ஆறு பற்கள் பூண்டுகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    முதலில் பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் போட்டு அதில் சன்னமாக நறுக்கிய காலானையும் பொடியாக நறுக்கிய கேரட்டையும் நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். உப்பு மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும். அதை ஒரு பிளேட்டில் மாற்றிக்கொள்ளவும.

  4. 4

    பிறகு அதே பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பெரிதாக நறுக்கிய காளான், பெரிதாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு ஆகியவற்றை சேர்த்து அதோடு உப்பு மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பிறகு 600 மில்லி தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளுங்கள்.

  5. 5

    காளான் வெங்காயம் பூண்டு வெந்ததும் அதை வடிகட்டி கொள்ளுங்கள்.வடிகட்டிய காளானை மிக்ஸி ஜாரில் போட்டு அதோடு கான்பிளவர், அரை கப் பால் சேர்த்து நன்கு மைய அரைத்துக்கொள்ளவும்

  6. 6

    அரைத்த விழுதை காளான் வடிகட்டிய தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.அதோடு முதலில் வதக்கி வைத்த காளான்,கேரட்டை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பிறகு சிறிது மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும்.

  7. 7

    இப்போது நமக்கு சுவையான சத்தான காளான் கேரட் சூப் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Padmavathi
Padmavathi @cook_25055108
அன்று

Similar Recipes