KFC style Crispy Cauliflower Fry

Navas Banu
Navas Banu @cook_17950579
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250 கிராம் காலிஃப்ளவர்
  2. 3 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  3. 3 டேபிள் ஸ்பூன் சோளமாவு
  4. 1 டேபிள் ஸ்பூன் பெப்பர் தூள்
  5. 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  6. பொடியாக நறுக்கிய மல்லி இலை - கொஞ்சம்
  7. தேவையானஅளவு உப்பு
  8. 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  9. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  10. 1/2 கப் தயிர்
  11. தேவையானஅளவு ஓட்ஸ்
  12. 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  13. 1 1/2 டேபிள் ஸ்பூன் சோளமாவு
  14. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    காலிஃப்ளவரை கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் காலிஃப்ளவர் முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து அதில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்,1 டீஸ்பூன் உப்பு சேர்த்து அந்த தண்ணீரில் காலிஃப்ளவரை போட்டு ஒரு நிமிடம் வேக வைத்து வடிகட்டியில் வடித்து எடுத்து ஆற‌ வைக்கவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோளமாவு, பெப்பர் தூள், மிளகாய் தூள், நறுக்கிய மல்லி இலை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி வைக்கவும்.

  4. 4

    ஆற வைத்த காலிஃப்ளவர் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து இந்த மாவில் போட்டு நன்றாக புரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  5. 5

    மீதமிருக்கும் இந்த மாவுடன் ஒன்றரை டேபிள்ஸ்பூன் சோளமாவு,2 டேபிள் ஸ்பூன் மைதா மாவு,அரை கப் தயிர், இஞ்சி பூண்டு விழுது,கரம் மசாலா தூள், தேவைக்கு உப்பும் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

  6. 6

    மாவில் புரட்டி வைத்திருக்கும் காலிஃப்ளவர் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து இந்த பேட்டரில் நன்றாக முக்கி எடுத்து பின்னர் இதனை ஓட்ஸில் நன்றாக புரட்டி எடுக்கவும்.

  7. 7

    ஒரு பேன் அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஓட்ஸில் புரட்டி வைத்திருக்கும் காலிஃப்ளவர் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  8. 8

    நல்ல கிரிஸ்ப்பியான‌ காலிஃப்ளவர் ஃப்ரை ரெடி.

  9. 9

    தக்காளி சாஸுடன் சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes