தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோ திராட்சை பழம்
  2. 1ஆப்பிள் பொடியாக நறுக்கியது
  3. 1 மேங்கோஸ்தீன் பழம்
  4. 3/4 கப் சீனி
  5. 1/2 கப் தண்ணீர்
  6. 1 கப் சோடா
  7. 2 டேபிள் ஸ்பூன் ஊறவைத்த சப்ஜா விதைகள்
  8. பொடியாக நறுக்கிய புதினா இலை கொஞ்சம்
  9. 5ஐஸ் கியூப்ஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    திராட்சை பழத்தை உதிர்த்து சுத்தமாக கழுவிக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரம் அடுப்பில் வைத்து அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் முக்கால் கப் சீனி சேர்த்து நன்றாக கரையும் வரை கொதிக்க விடவும்.

  3. 3

    பின்னர் இதில் கழுவி வைத்திருக்கும் திராட்சை பழத்தை சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.

  4. 4

    திராட்சை பழம் வெந்ததும் வடிகட்டியில் வடித்துக் கொள்ளவும்.

  5. 5

    வடித்து வைத்த திராட்சை பழத்தை ஆற வைக்கவும்.

  6. 6

    ஆறிய திராட்சை பழத்தை மிக்ஸியில் நன்றாக அடித்து ஜூஸாக்கி வடிகட்டியில் வடித்துக் கொள்ளவும்.

  7. 7

    ஒரு பெரிய கண்ணாடி கிளாஸ் எடுத்து அதில் முதலில் ஐஸ் கியூப்ஸ் சேர்க்கவும்.

  8. 8

    இரண்டாவது ஊறவைத்த சப்ஜா விதைகள் சேர்க்கவும்.

  9. 9

    மூன்றாவது அடித்து வைத்திருக்கும் திராட்சை ஜூஸ் அரை கப் சேர்க்கவும்.

  10. 10

    நான்காவது சோடா சேர்க்கவும்.

  11. 11

    இறுதியில் இதில் மேங்கோஸ்தீன் பழத்துண்டுகள், நறுக்கிய ஆப்பிள் சேர்க்கவும்.

  12. 12

    இதன்‌ மேல் புதினா இலை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

  13. 13

    புதுமையான சுவையில் ஃபுரூட் பன்ச் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes