மூலிகை பிரியாணி

Vajitha Ashik
Vajitha Ashik @cook_26088811
Singapore

#onepot
நோய் எதிர்ப்பு சக்தி தரும்.
என் அம்மா கற்று தந்த உணவு.
கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது.
மாதத்தீட்டு சரியாக வந்து விடும்.
மாதம் 2முறை சாப்பிடலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
3 பரிமாறுவது
  1. பாசுமதி அரிசி-2கப்
  2. தண்ணீர்-4கப்
  3. சின்ன வெங்காயம்-10
  4. தக்காளி&பச்சை மிளகாய்-1
  5. இஞ்சி பூண்டு விழுது-1டே.ஸ்பூன்
  6. நெய்-2டே.ஸ்பூன்
  7. பட்டை,கிராம்பு,ஏலக்காய்-2
  8. மல்லித்தழை-சிறிது
  9. சீரக தூள்&மிளகு தூள்&மல்லி தூள்-1டீஸ்பூன்
  10. மஞ்சள் தூள் &சோம்புத்தூள்-1/2டீஸ்பூன்
  11. கருஞ்சீரகத்தூள்&திரிகடுகப்பொடி&சதகுப்பை&சாலியா-1டீஸ்பூன்
  12. பெருங்காயப்பொடி-சிறிது

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    பாசுமதி அரிசியை 1/2 மணிநேரம் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.

  2. 2

    வாணலியில் நெய்,பட்டை,கிராம்பு,ஏலக்காய் சேர்த்து பொரிந்ததும் சின்ன வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,மல்லித்தழை சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  3. 3

    ஒன்றன்பின் ஒன்றாக எல்லாபொருட்களையும் சேர்த்து வதக்கி 4கப் தண்ணீர்,உப்பு சேர்த்து கொதித்ததும்

  4. 4

    ஊற வைத்த அரிசியை கலைந்து தண்ணீர் வடித்து சேர்த்து மூடி வைக்கவும்.

  5. 5

    20 நிமிடம் மிதமான தீயில் தம் போட்டு வெந்ததும் கிளறி பரிமாறவும்.

  6. 6

    இன்னும் மிருதுவாக இருக்க 1 கப் தண்ணீருக்கு பதிலாக 1 கப் தேங்காய்ப்பால் சேர்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vajitha Ashik
Vajitha Ashik @cook_26088811
அன்று
Singapore
என்னுடைய 11வயதில் இருந்து சமையல் செய்து கொண்டிருக்கிறேன்.
மேலும் படிக்க

Similar Recipes