டொமாடோ குர்மா (Tomato kurma)

டொமட்டோ குர்மா கர்நாடகா
மக்களின் சுவையான ஒரு கிரேவி. இதில் எள்ளு சேர்த்துள்ளதால் மிகவும் வித்யாசமான சுவையில் இருக்கும்.
#Karnataka
டொமாடோ குர்மா (Tomato kurma)
டொமட்டோ குர்மா கர்நாடகா
மக்களின் சுவையான ஒரு கிரேவி. இதில் எள்ளு சேர்த்துள்ளதால் மிகவும் வித்யாசமான சுவையில் இருக்கும்.
#Karnataka
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் நறுக்கி வைத்துக்கொள்ளவும். இஞ்சிபூண்டு விழுது, சீரகம் தயாராக வைக்கவும்.
- 2
கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும், தனியா, எள்ளு, சீரகம், வெந்தயம், வற்றல், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். அத்துடன் தேங்காய்த்துருவல் எல்லாம் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் கலந்து விழுதாக அரைக்கவும்.
- 3
மண் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 4
பின்னர் அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும். கொஞ்சம் வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
தக்காளி, மசாலா எல்லாம் நன்கு கொதித்து எண்ணை பிரிய ஆரம்பித்தவுடன் இறக்கி பரிமாறும் பௌலுக்கு மாறினால் தக்காளி குர்மா தயார்.
- 6
இந்த கர்நாடக ஸ்டைல் குர்மா சாதத்துடன், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Similar Recipes
More Recipes











கமெண்ட்