ஜில் ஜில் ஜிகர்தண்டா (Jiharthanda recipe in tamil)

#cookwithmilk ஜிகர்தண்டாவை ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்யத் தோன்றும்... மிகவும் ருசியான அருமையான ஒரு குளிர்பானம்... வெயில் காலங்களில் சாப்பிட ஏற்றதுஅதிக புரதச்சத்தை கொண்டது....
ஜில் ஜில் ஜிகர்தண்டா (Jiharthanda recipe in tamil)
#cookwithmilk ஜிகர்தண்டாவை ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்யத் தோன்றும்... மிகவும் ருசியான அருமையான ஒரு குளிர்பானம்... வெயில் காலங்களில் சாப்பிட ஏற்றதுஅதிக புரதச்சத்தை கொண்டது....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முழு கிரீம் பால் அரை லிட்டர் எடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும். பால் பொங்கியதும் அதனுடன் கேராமல் எசன்ஸ் அல்லது நாட்டுச் சர்க்கரை இனிப்புக்கு தகுந்தவாறு சேர்த்து கிளறவும்... பிறகு அதனுடன் இரண்டு ஸ்பூன் கான்பிளவர் மாவை சிறிது ஆறிய பாலில் கலக்கி கொதிக்கின்ற பாலில் ஊற்றி கிளறவும். நன்கு கெட்டியாக கூல் போன்ற பதத்திற்கு வந்ததும் இறக்கி வைத்து ஆறவிடவும்... நன்றாக ஆறிய பிறகு ஒரு கன்டெய்னரில் ஊற்றி ஆறு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்... இப்போது ஜிகர்தண்டா ஐஸ்கிரீம் தயாராகிவிட்டது...
- 2
அரை லிட்டர் தண்ணீர் ஊற்றாத கெட்டியான பாலை பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதி வந்ததும் குறைந்த தீயில் சுண்டக் காய்ச்சவும். அதனுடன் 5 ஸ்பூன் கேராமல் எசன்ஸ் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சி இறக்கவும்... பிறகு மற்றொரு பாத்திரத்தில் அரை லிட்டர் பாலை சேர்த்து நன்கு சுண்டக் காய்ச்சவும். நன்கு பால்கோவாவிற்கு முந்தின பதம் வரும் வரை காய்ச்சி இறக்கவும்... பின்பு சுண்ட காய்ச்சிய பால் மற்றும் ஆடை திரண்ட பால் இரண்டையும் ஒரு கன்டெய்னரில் ஊற்றி ஃப்ரிட்ஜில் 6 மணி நேரம் வைத்துக் கொள்ள வேண்டும்...
- 3
நன்னாரி சர்பத் எடுத்து வைத்துக் கொள்ளவும்.. பிறகு பாதாம் பிசின் இரண்டு அல்லது மூன்று துண்டுகளை தண்ணீரில் போட்டு பிரிட்ஜில் ஆறு மணி நேரம்வைத்துக்கொள்ளவும்... தயார் செய்த அனைத்தையும் முந்தைய தினத்தில் செய்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்..
- 4
தயாரித்த அனைத்தையும் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.. பிறகு ஒரு டம்ளர் எடுத்து முதலில் இரண்டு ஸ்பூன் ஊறவைத்த பாதாம் பிசினை போட்டுக்கொள்ளவும் ஒரு ஸ்பூன் நன்னாரி சர்பத் சேர்த்துக் கொள்ளவும்.. சுண்டக் காய்ச்சிய பால் சிறிது ஊற்றிக் கொள்ளவும். அதனுடன் ஐஸ் கிரீம் ஒரு ஸ்கூப் வைத்து அதன் மேல் ஆடை திரண்ட பாலை ஊற்றினால் மிகவும் சுவையான ஜிகர்தண்டா தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பட்டர் ஸ்காட்ச் மில்க் ஷேக் (Butterscotch Milkshake recipe in tamil)
#cookwithmilkமில்க்ஷேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அந்த மில்க் ஷேக்கை பட்டர் ஸ்காட்ச் ஐஸ் க்ரீம் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். பாலில் உள்ள கால்சியம் சத்து குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.Nithya Sharu
-
-
-
-
மதுரை ஜிகர்தண்டா
எங்க மதுரையின் famous ஜில் ஜில் ஜிகர்தண்டா குழந்தைகளின் விருப்பமான குளிா்பானம்#kids2#desert&drinks Sarvesh Sakashra -
-
திணிக்கப்பட்ட தேங்காய்- ஸ்டப்டு கோகோநட் (Stuffed coconut recipe in tamil)
#kerala குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது..மிகவும் ருசியாக இருக்கும்... கேரளாவில் பண்டிகை காலங்களில் செய்யப்படும் ஒரு இனிப்பு... Raji Alan -
பாதாம் பிசின் ரோஸ் மில்க்
#summer - வெயில் காலங்களில் உடல் உஷ்ணத்தை குறைக்கிறதுக்கு பாதாம் பிசின் ரொம்பவே உதவுகிறது... Nalini Shankar -
திராட்சைப் பழச்சாறு (Grapes juice recipe in tamil)
#arusuvai3#goldenapron3 பொதுவாக திராட்சையில் கொட்டை இருப்பதால் அதை உண்பதற்கு குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். ஆனால் திராட்சைப் பழக் கொட்டைகள் தான் அதிக சத்து உள்ளது. திராட்சையில் டார்டாரிக் அமிலம் உள்ளது. இனிப்பு புளிப்பு துவர்ப்பு சுவையாகவும் இருக்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும். பால் சேர்ப்பதனால் உடலுக்கு கால்சியம் சத்தும் தரும். A Muthu Kangai -
ஜிகர்தண்டா சர்பத்(jigarthanda recipe in tamil)
#Sarbathஇது மிக மிக சுவையான ஆரோக்கியமான மிகவும் குளிர்ச்சியான சர்பத், செய்வது மிகவும் எளிது , அடிக்கற வெயிலில செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
ரோஸ் மில்க் ஜிகர்தண்டா
#friendship day இந்த பானம் என் தோழமை தோழி சித்ரா குமார் அவர்களுக்கு செய்கின்றது இதுகுளுமையானது நிறைய நிறைய நேரம் எடுத்துக் கொள்ளாது மிகவும் எளிதாக செய்து கொடுத்துவிடலாம் முன்னேற்பாடாக பால் காய்ச்சி வைத்திருந்து பாதாம் பிசின் ஊறவைத்து வைத்திருந்தால் திடீர் விருந்தாளியை கூட மகிழ்வாக வரவேற்கலாம் ஜில் ஜில் கூல் கூல் மல்மல் ஜெயக்குமார் -
-
பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil)
பாலுடன் நன்னாரி சிரப் சத்தான பொருட்களை சேர்த்து சர்பத்.#sarbath Rithu Home -
குளிரூட்டும் ரோஸ் மில்க் (Kulirootum Rose Milk Recipe in Tamil)
பாலில் அதிகப்படியான கால்சியம் உள்ளது அதனால் இது இந்த வெயில் காலங்களில் குடிப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான நட்ஸ் மில்க் ஷேக் Prabha muthu -
லெமன் சர்பத் (Lemon sharbath recipe in tamil)
#goldenapron3#nutrient3#family எலுமிச்சம் பழத்தில் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. உடம்பிற்கு நல்ல குளிர்ச்சி தரும். கால்சியம் காப்பர் இரும்புச்சத்து பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் உள்ளன. நிறைய மருத்துவ குணங்களும் உண்டு. எலுமிச்சை பழத் தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதனால் நாங்கள் எங்கள் குடும்பத்தோடு லெமன் ஜூஸ் ஷர்பத் போட்டு வாரத்திற்கு இரண்டு நாள் பருகுவோம். அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜூஸ். A Muthu Kangai -
ஹரிரா(harira recipe in tamil)
எங்கள் வீட்டில் செய்யக்கூடிய பாரம்பரியமான ஒரு செய்முறையை உங்களோடு பகிர்ந்துள்ளேன் Asma Parveen -
பேரிட்சை தேங்காய் பால் ஷேக்(dates with coconut milk shake recipe in tamil)
இது வெயிட் லாஸ் செய்ய உதவும் Swetha V -
-
-
-
More Recipes
கமெண்ட் (3)