கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)

Raji Alan
Raji Alan @cook_25734398

#bake
மைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்...

கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)

#bake
மைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50நிமிடம்
6நபர்
  1. 1கப்கோதுமை மாவு
  2. 1/2கப்தயிர்
  3. 1/2 கப்எண்ணெய்
  4. 1கப்நாட்டுச் சர்க்கரை
  5. 1/4 ஸ்பூன்பேக்கிங் சோடா
  6. 1ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  7. 2ஸ்பூன்கோகோ பவுடர்
  8. கிரீம் செய்ய:
  9. 7பிஸ்கட்
  10. பால்
  11. நாட்டுச் சர்க்கரை
  12. வெண்ணிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

50நிமிடம்
  1. 1

    முதலில் தயிர், எண்ணெய், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை நன்கு விஸ்க் வைத்து அடித்து கலக்கிக் கொள்ளவும்..

  2. 2

    பிறகு அதில் கோதுமை மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், கோகோ பவுடர் ஆகியவற்றை சலித்து அதில் சேர்த்து கலக்கி வைக்க வேண்டும்..

  3. 3

    குக்கரில் உப்பு (அ) மணல் போட்டு ஒரு ஸ்டாண்டு வைத்து 5நிமிடம் மிதமான தீயில் மூடி போட்டு சூடு செய்ய வேண்டும்..

  4. 4

    ஒரு பாத்திரத்தில் பட்டர் ஸீட் போட்டு எண்ணெய் தடவி அதில் கேக் கலவையை ஊற்றி குக்கரில் வைத்து மூடி போட்டு விசில் இல்லாமல் 40நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்... வெந்ததும் நடுவில் ஒரு கத்தியால் குத்தி பார்க்கவும்.. ஒட்டாமல் வந்தால் கேக் ரெடி..

  5. 5

    ஏதேனும் ஒரு வகை பிஸ்கட் களை தூள் செய்து அதில் பால்,நாட்டுச் சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்தில் கலக்கிக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் வைத்து கெட்டியாக வரும் வரை கிளறி இறக்கவும்..

  6. 6

    பிறகு விருப்பத்திற்கு ஏற்ப கேக்கை அலங்கரித்துக் கொள்ளலாம்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Raji Alan
Raji Alan @cook_25734398
அன்று

Similar Recipes