வெந்தய களி

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#GA4
#Week2
உடலுக்கு குளிர்ச்சி தரும் ஒரு அற்புதமான உணவு

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 100 கிராம் இட்லி அரிசி
  2. 25___கிராம் +2 ஸ்பூன் வெந்தயம்
  3. 1 டேபிள் ஸ்பூன் உளுந்து
  4. 50 மில்லி நல்லெண்ணெய்
  5. 2 ஸ்பூன் வெந்தயம்
  6. 80 கிராம் கருப்பட்டி
  7. 6 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    வெந்தயம் உளுந்து இட்லி அரிசி மூன்றையும் இரண்டு முறை கழுவி தனித்தனியாக 8 மணி நேரம் வரை ஊறவிடவும் வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை மட்டும் கீழே ஊற்றாமல் தனியாக எடுத்து வைக்கவும்

  2. 2

    எட்டு மணி நேரம் கழித்து உளுந்து உடன் வெந்தயம் (2 ஸ்பூன் வெந்தயத்தை தனியாக எடுத்து வைக்கவும்) சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும் வெந்தயம் ஊறவைத்த நீரை சிறிது சிறிதாக தெளித்து அரைத்து எடுக்கவும் பின் அரிசி உடன் ஏலக்காய் சேர்த்து தனியாக அரைத்து எடுக்கவும்

  3. 3

    கருப்பட்டி உடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும் பின் அதனுடன் அரைத்து வைத்துள்ள அரிசி மாவு மற்றும் உளுந்து வெந்தய மாவை சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்

  4. 4

    பின் நான்ஸ்டிக் பேனில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் தனியாக எடுத்து வைத்துள்ள வெந்தயத்தை சேர்த்து நன்கு வதக்கவும் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து கருக விடாமல் கிளறவும் பின் கரைத்து வைத்துள்ள வெந்தய கரைசலை ஊற்றி நன்கு கிளறவும்

  5. 5

    கிளற கிளற சற்று திக்காக ஆரம்பிக்கும் தொடர்ந்து அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும் நன்கு சுருண்டு வரும் போது இறக்கி விடவும்

  6. 6

    சுவையான ஆரோக்கியமான வெந்தய களி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes