பஞ்சவர்ண டிலைட் (no essence)

செம்பியன்
செம்பியன் @chempi_palsuvai
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA

#Np2
கல்யாண வீட்டில் முன் வார விருந்தில் நாள் ஒன்று வீதம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கலர் இல் பறி மாற படும்.

பஞ்சவர்ண டிலைட் (no essence)

#Np2
கல்யாண வீட்டில் முன் வார விருந்தில் நாள் ஒன்று வீதம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கலர் இல் பறி மாற படும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 100 கிராம் ரவை
  2. 50 கிராம் நாட்டு சர்க்கரை
  3. 50 கிராம் பால் பவுடர்
  4. 50 கிராம் காய்ந்த தேங்காய் துருவல்
  5. 50 மில்லி பீட்ரூட் ஜூஸ் (1)
  6. 100 கிராம் கேரட் துருவல் (2)
  7. 50 கிராம் பிஸ்தா பருப்பு (3)
  8. 5 கிராம் மஞ்சள் தூள் (4)
  9. 20 கிராம் சாக்லேட் (5)
  10. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  11. 2 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    (1) சிவப்பு நிறம் :
    தேவையான பொருட்கள்
    பீட்ரூட் நன்கு அடிதது ஜுஸ் வைத்து கொள்ளவும்

  2. 2

    ரவையை வறுத்து தனியாக எடுத்துக் கொண்டு,பின் பீட்ரூட் ஜூஸ் சேர்த்து நெய், ஏலக்காய்,சேர்க்க வேண்டும்

  3. 3

    சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்

  4. 4

    பிறகு வறுத்த ரவை, தேங்காய் துருவல், பால் பவுடரை சேர்த்து கொள்ளவும், அடுப்பை அணைத்து விட்டு கிளறி விடவும்.

  5. 5

    கை யில் ஒட்டாமல் இருக்க வேண்டும், உருண்டைகளாக உருட்டி தேங்காய் துருவல் பிரட்டி எடுக்கவும்

  6. 6

    (2)ஆரஞ்சு நிறம் :
    தேவையான பொருட்கள், கேரட் துருவல் எடுத்து கொள்ளவும்

  7. 7

    கடாயில் நெய் விட்டு கேரட் நன்கு வதக்கவும், பிறகு சர்க்கரை சேர்த்து கிளறவும், உருகும் வரை காத்திருக்க வேண்டும்

  8. 8

    பின் வருத்த ரவை, தேங்காய் துருவல், பால் பவுடரை சேர்த்து கொள்ளவும்.கிளறி விட்டு ஒட்டாமல் வரும் போது இறக்கவும்

  9. 9

    (3) ப‌ச்சை நிறம் :
    தேவையான பொருட்கள்.
    பிஸ்தா பருப்பு வுடன் பிடிக்கும் எனில் கருவேப்பில்லை சேர்க்கலாம்

  10. 10

    பிஸ்தா பருப்பு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக அரைத்து கொள்ளவும். கடாய் யில் நெய் விட்டு, இந்த கலவையை சேர்த்து, சர்க்கரை சேர்த்து நன்கு கொ தி க்க விடவும்

  11. 11

    பிறகு வறுத்த ரவை, தேங்காய் துருவல், பால் பவுடரை சேர்த்து கொள்ளவும்

  12. 12

    (4) மஞ்சள் நிறம் :
    தேவையான பொருட்கள்.
    இதில் பால் பவுடர் கு பதில் பால் எடுத்து கொள்ள வேண்டும். பால் வுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும்

  13. 13

    கடாய் யில் நெய் விட்டு, ரவையை வறுத்து அதனுடன் சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்துக் கொண்டு, 2 நிமிடம் கழித்து மஞ்சள் பால் சேர்த்து கொள்ளவும்

  14. 14

    ஒட்டாமல் வரும் போது இறக்கவும்

  15. 15

    (5) சாக்கோ நிறம் :
    தேவையான பொருட்கள்.

  16. 16

    நெய் விட்டு சாக்லேட் சேர்த்து உருகி பின் கெட்டியாக வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும். இப்படி செய்தால் சாக்லேட் சிப்ஸ் மாறி கிடைக்கும்

  17. 17

    இப்போது வறுத்த ரவை,சர்க்கரை, தேங்காய் துருவல், பால் பவுடரை, சேர்த்து நன்கு கிளறவும், பிறகு 50 மில்லி சூடான் தண்ணீர் சேர்த்து கிளறவும்

  18. 18

    கிளறி கொண்டே இருக்கும் போது சாக்கோ நிறம் மாறும், அடுப்பை அணைத்து விடவும், சாக் கோ சிப்ஸ், தேங்காய் துருவல் வைத்து அலங்கரிக்கவும்.

  19. 19

    ஒவ்வொரு நிறத்துக்கு ஒரு கதை சொல்லும் வழக்கம் உண்டு.

  20. 20

    இதை ஒரு வாரம் வரை கெடாமல் வைக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
செம்பியன்
அன்று
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA பல்சுவை
மேலும் படிக்க

Similar Recipes