பீட்ரூட் கட்லெட் (Beetroot cutlet recipe in Tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#GA4
# week 5
# Beetroot
பீட்ரூட் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த அளவு அதிகரிக்கும் .

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1கப் துருவிய பீட்ரூட்
  2. 1 கப் பொரிகடலை
  3. ஒரு ஸ்பூன் சீரகம்
  4. 3 மிளகாய் வத்தல்
  5. 2 ஸ்பூன் அரிசி மாவு
  6. அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. ஒரு ஸ்பூன் மிளகாய் வத்தல் பொடி
  8. 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  9. தேவையானஅளவு உப்பு
  10. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
  11. சிறிதளவுஇஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பீட்ரூட்டை துருவி எடுத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் பொரிகடலை சீரகம் மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்து தண்ணீர் விடாமல் பொடியாக்கிக் கொள்ளவும்

  2. 2

    துருவிய பீட்ரூட் உடன் பொரிகடலை பொடியை சேர்த்து கொள்ளவும்

  3. 3

    அரிசி மாவு இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும்

  4. 4

    தண்ணீர் விடாமல் பீட்ரூட் உடன் இருக்கும் தண்ணீரை வைத்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்

  5. 5

    பின்பு சிறு உருண்டையாக உருட்டி தட்டி கொள்ளவும். கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். உள்ளே நன்றாக வேகும் வரை அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக பொறித்து எடுக்கவும்.

  6. 6

    வித்தியாசமான முறையில் பீட்ரூட் கட்லெட் தயார் ஆகிவிட்டது

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

Similar Recipes