சாக்லேட் பிஸ்கட் பேடா (Chocolate biscuit peda recipe in tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

தீபாவளிக்கு வித்தியாசமான ஸ்வீட் நமது வீட்டிலேயே தயார் செய்யலாம் . இது எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட். வீட்டில் மீதமான பிஸ்கட்டை வைத்து இதனை செய்யலாம் .
#Diwali

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1மேரி கோல்ட் பிஸ்கட் பாக்கெட்
  2. ரெண்டு ஸ்பூன் கொக்கோ பவுடர்
  3. சர்க்கரை தேவையான அளவு
  4. ஒரு ஸ்பூன் நெய்
  5. ஒரு கப் பால்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் பிஸ்கட் உதிர்த்து எடுத்துக் கொள்ளவும். நைசாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    பின்பு சர்க்கரை தேவையான அளவு, கொக்கோ பவுடர் இரண்டு ஸ்பூன் சேர்த்து மறுபடியும் அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    வேறொரு தட்டில் மாற்றிக் கொள்ளவும்.

  4. 4

    பிஸ்கட் கலவையில் சிறிது சிறிதாக பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும். ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளலாம் தேவைப்பட்டால்.

  5. 5

    சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

  6. 6

    பேடா மேக்கர் வைத்து அச்சிடலாம் அல்லது பிளாஸ்டிக் டிசைனில் வைத்து அழுத்தவும். நான் பேடா மேக்கர் வைத்து செய்துள்ளேன்.

  7. 7

    ஒரு உருண்டையை எடுத்து அதன் மீது பேடா மேக்கரை வைத்து அழுத்தம் கொடுக்கவும். நமக்கு விருப்பமான வடிவத்தில் செய்து கொள்ளலாம்.

  8. 8

    வித்தியாசமான முறையில் மீதமான பிஸ்கட்டை வைத்து செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

Similar Recipes