தியா சாக்கோ டார்ட் (Diya choco tart)
சமையல் குறிப்புகள்
- 1
60 கிராம் உப்பு சேர்த்த வெண்ணெயுடன், 2 மேஜைக்கரண்டி பொடித்த சர்க்கரை மற்றும் ஒரு கப் மைதா மாவு சேர்க்கவும்.
- 2
இதனை கலந்து கொள்ளவும், கூடவே ஒரு மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து, அழுத்தமில்லாமல் பிசைந்து கொள்ளவும்.
- 3
சிறிது பிசைந்த பின் மீண்டும் ஒரு மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து மாவை உருட்டி கொள்ளவும்.
- 4
ஒரு பட்டர் பேப்பரின் மீது சிறிது மைதா மாவு தூவி பிசைந்த மாவை அதன் மீது வைக்கவும். இதற்கு மேல் மற்றொரு பட்டர் பேப்பரை வைத்து மூடவும். விரல்களைக் கொண்டு சிறிது தட்டி விடவும்.
- 5
அதற்குப்பின் சப்பாத்தி கட்டையில் வைத்து மிருதுவாக தேய்த்துக் கொள்ளவும்(3 mm thickness). பட்டர் பேப்பரை எடுத்து விட்டு குக்கி கட்டர் வைத்து கட் செய்து கொள்ளவும்.
- 6
வெட்டி எடுத்த மாவை ஒரு சிலிகான் கப் கேக் மோல்டின் அடியில் வைத்து படத்தில் காட்டியுள்ளபடி கிண்ண வடிவில் அழுத்தி விடவும்.
- 7
இவ்வாறு தயார் செய்த அனைத்தையும் பேக்கிங் ட்ரேயில் அடுக்கி வைக்கவும். ஓ.டி. ஜியை 160 டிகிரி செல்சியஸில் 10 நிமிடம் பிரிஹீட் செய்யவும்.அதன் பின் பேக்கிங் ட்ரேயை வைத்து 160 டிகிரி செல்சியஸில் 20 நிமிடம் பேக் செய்யவும்.
- 8
மீதமுள்ள மாவை மீண்டும் தேய்த்து குக்கி கட்டர் உபயோகித்து குக்கீஸ் வெட்டி எடுக்கலாம்.ஓ.டி.ஜி இல்லாதவர்கள் படத்தில் காட்டியுள்ளபடி சிறிய கிண்ணத்தின் அடிப்பகுதியில் வைத்து அழுத்தம் கொடுத்து தயார் செய்யவும். ஒரு குக்கரை 5 நிமிடம் குறைவான தீயில் பிரீ ஹீட் செய்யவும். அதன்பின் உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன்மீது ஒரு தட்டை வைத்து தயார் செய்த குக்கீகளை அடுக்கி வைக்கவும். ரப்பர் மற்றும் விசில் எடுத்துவிட்டு குக்கரை மூடி 20 நிமிடம் சிறு தீயில் பேக் செய்யவும்.
- 9
இப்போது ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைக்கவும். அதற்குள் மற்றொரு கிண்ணம் வைத்து 20 கிராம் வெள்ளை சாக்லேட் சேர்த்து டபுள் பாயில் முறையில் உருக்கவும். உருகிய சாக்லேட்டில் 3 சொட்டு ஆரஞ்சு நிறம் சேர்த்து கலக்கி விடவும்.
- 10
இதனை ஒரு ஃபாயில் கவரில் சேர்த்து பட்டர் பேப்பரின் மீது திரியை போல் டிசைன் செய்து கொள்ளவும். தயாரித்த சாக்லேட் வடிவங்களை ஃப்ரீசரில் வைத்து விடவும்.
- 11
பேக் செய்த குக்கீகளை சிலிகான் மோல்டில் இருந்து எடுத்து கம்பி இராக்கின் மீது ஆற வைக்கவும்.
- 12
இப்போது அதே கொதிக்கும் தண்ணீரில் மற்றொரு கிண்ணத்தில் 120 கிராம் டார்க் சாக்லெட் சேர்த்து உருக்கவும். இதோடு ஒரு மேஜைக்கரண்டி பொடித்த சர்க்கரை, ஒரு மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும்.
- 13
நன்கு உருகிய சாக்லேட் கலவையை தயார் செய்த பிஸ்கட் கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி ஊற்றவும். அதன் மீது சிறிது நறுக்கிய பாதாம் பருப்பை சேர்க்கவும்.
- 14
மீண்டும் அதன் மீது ஒரு தேக்கரண்டி சாக்லேட் கலவையை ஊற்றவும். இதனை ஐந்து நிமிடம் செட் செய்ய விடவும். அதன்பின் ஃப்ரீசரில் வைத்த திரிகளை எடுத்து நடுவில் வைக்கவும். அலங்கரிக்க சிறிது வெள்ளி நிற ஸ்ப்ரிங்கில்ஸ்களை தூவி விடவும். இவ்வாறு அனைத்தையும் தயார் செய்து கொள்ளவும். எனக்கு இது போன்ற 12 விளக்குகள் கிடைத்துள்ளன.
- 15
முற்றிலும் புதுமையான சாக்லேட் விளக்கு அனைவரையும் கவரும் விதத்தில் தயார். இந்த தீபாவளியை வண்ணங்களுடன் கொண்டாடி மகிழலாம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
-
-
-
-
பூந்தி லட்டு
#deepavali #kids2லட்டு செய்ய தெரியாதவர்கள் கூட பயமின்றி செய்யும் வகையில் சுலபமான ஒரு முறையை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Asma Parveen -
-
ஓரியோ சாக்கோ லாவா கப் கேக்
#everyday4குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஓரியோ பிஸ்கட் கொண்டு அருமையான லாவா கேக் ரெசிபி பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
சந்திரகலா (Mawa gujiya) (Chandrakala recipe in tamil)
#deepavali #kids2எளிய முறையில் சந்திரகலா தயாரிப்பதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இதனை நீங்களும் செய்து பார்த்து குடும்பத்துடன் தீபாவளியை தித்திப்பாக கொண்டாட வாழ்த்துகிறேன். Asma Parveen -
முட்டையில்லாத கோதுமை சாக்லேட் பெட்ஜ்
இந்த பிரவ்னீஸ் கோதுமை மாவு வால்நட்ஸ் பிஸ்தா மற்றும் சாக்லேட் சேர்த்து செய்யப்படுகிறது. PV Iyer -
வால்நட் பிரவுனி (Walnut brownie recipe in tamil)
உங்களுக்கு தேவையான சரியான ஃபட்ஜ் பிரவுனி, வழிமுறைகளைப் பின்பற்றவும், நீங்கள் சரியான மெல்லிய பிரவுனியைப் பெறுவீர்கள்.#flour1 Vaishnavi @ DroolSome -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#flour1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பின் மேல் குக்கரை வைத்து பிளாக் பாரஸ்ட் செய்முறையை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். Asma Parveen -
பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்
#kayalscookbookஎப்போதும் சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ்களை விட சற்று புதுவிதமாக நான் இந்த கார்ன் கிரொக்கெட்ஸ் ஐ தயாரித்துள்ளேன். இதை நாம் அதிகமான அளவில் தயார் செய்து ஃப்ரீசரில் வைத்து இரண்டு மாதங்கள் வரை வைத்து தேவைப்பட்ட பொழுது தேவையான அளவு பொரித்து சாப்பிடலாம். Asma Parveen -
சாக்லேட் தேங்காய் பர்பி
#wd எனது அருமை மகள் அனுஷ்காவிற்கு சாக்லேட் தேங்காய் பர்பி டிஷ் செய்து தருகிறேன். மிகவும் சுவையாக இருக்கும் ஹேப்பி women's நாள் நல்வாழ்த்துக்கள்... Anus Cooking -
-
-
-
ஆரோக்கியமான பாதாம் ஓட்ஸ் குக்கீஸ்
#Grand1கிறிஸ்துமஸ் என்றாலே நினைவுக்கு வருவது கேக், குக்கீஸ் புடிங்ஸ் வகைகள் தான். அவற்றில் ஒன்றான குக்கீஸ் செய்முறையை இன்று பகிர்ந்து கொள்கிறேன். இந்த குக்கீஸ் மிகவும் ஆரோக்கியமானதாகும் இதில் கோதுமை மாவு, ஓட்ஸ், பாதாம் பருப்பு மாவு சேர்க்கப்பட்டுள்ளதால் எல்லா வயதினரும் சாப்பிடலாம்.இன்று நான் வெள்ளை சர்க்கரை தூள் சேர்த்து செய்முறை காட்டியுள்ளேன் இதற்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் செய்யலாம். Asma Parveen -
-
Thinai Cashew Choco Burfi
#deepavali #kids2 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் BhuviKannan @ BK Vlogs -
சீசி வெஜ் பீட்சா
#kids1 #GA4 #week9 #maidaஎல்லோருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பீசா காய்கறிகள் சேர்க்கப்பட்ட சுவையாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே தயார் செய்யலாம். இதில் மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு உபயோகித்தும் செய்யலாம். Asma Parveen -
-
-
-
-
தந்தூரி பட்டர் நான் (Tandoori butter naan recipe in tamil)
#flour1தந்தூர் மற்றும் ஓவன் இல்லாமல் மிகவும் சுலபமான முறையில் தந்தூரி பட்டர் நான் செய்யும் முறையைப் பார்க்கலாம். இதில் ஈஸ்ட் சேர்க்கப்பட வில்லை ஆகையால் குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம். Asma Parveen -
More Recipes
கமெண்ட் (4)