மொறு மொறு சிக்கன் (KFC Fried Chicken Recipe) (Moru moru chicken recipe in tamil)

Teenu & Moni's Life
Teenu & Moni's Life @cook_27243006

அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவுகளில் மிகவும் முக்கியமானது சிக்கன் தான். ஏன் என்றால் சிக்கனை வைத்து விதவிதமாக நாம் உணவுகளை தயாரிக்கலாம் . அதிலும் சில வருடங்களாக வயது வரம்பின்றி அனைவரது மனதிலும் மிகவும் பிடித்த உணவாக இந்த KFC சிக்கன் மாறிவிட்டது . இதை எளியமுறையில் சுலபமாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலே செய்து நமக்கு பிடித்தவர்களுக்கு கொடுப்பதில் இருக்கும் ஆனந்தமே தனி தான் . இந்த ரெசிபியை இங்கு பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி . #skvweek2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
6 நபர்கள்
  1. 1 கிலோ சிக்கன்
  2. 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி
  3. 1 டீஸ்பூன் கரம் மசாலா பொடி
  4. 1 டீஸ்பூன்மிளகு பொடி
  5. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. உப்பு தேவையான அளவு
  7. 1 முட்டை
  8. 2 டேபிள் ஸ்பூன் தயிர்
  9. ஒரு கப் மைதா மாவு (150 கிராம்)
  10. அரை கப் சோளமாவு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு அகல பாத்திரத்தில் 1kg சிக்கனை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றவும், முட்டை சேர்த்தவுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் மசாலா பொருட்களை அதில் சேர்க்கவும். இந்த கலவையை நன்றாக கலந்துவிடவேண்டும்.

  2. 2

    பிறகு இதில் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து கிளறவேண்டும். சிக்கன் பீஸ் இடையில் லேசாக கீறல் போட்டு மசாலாவை தடவ வேண்டும். இந்த கலவை சுமார் 2 மணி நேரம் ஊறவேண்டும்.

  3. 3

    ஒரு தட்டில் ஒரு கப் மைதா மாவு மற்றும் அரை கப் சோளமாவு கலந்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். நன்றாக ஊறிய சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து இந்த மாவில் பிரட்டி எடுக்கவேண்டும். இதேபோல் அணைத்து துண்டுகளையும் பிரட்டி எடுத்து கொள்ளுங்கள்.

  4. 4

    நாம் ஊறவைத்த மசாலாவில் சிறுதளவு எடுத்து அதில் தண்ணீர் சேர்வைத்துக்கொள்ளவும். நாம் மைதா மற்றும் சோளமாவில் பிரட்டி எடுத்த சிக்கன் துண்டுகளை இந்த தண்ணீரில் நனைத்து பிறகு இந்த மாவில் இரண்டாவது முறை பிரட்டி எடுக்க வேண்டும்.

  5. 5

    இதுபோல் குறைந்தபட்சம் 2 முறை செய்துவைக்க வேண்டும். அப்போது தான் கடைகளில் கிடைப்பது போல் மொறு மொறுவென அதன் மேல்புறம் இருக்கும்.

  6. 6

    ஒரு கிடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைக்க வேண்டும். சற்று எண்ணெய் காய்ந்ததும் நாம் செய்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை அதில் சேர்த்து பொன்னிறமாக வறுத்துஎடுக்க வேண்டும்.

  7. 7

    சுவையான KFC சிக்கன் பரிமாற தயார். உங்கள் வீட்டு குட்டிஸ்களுக்கு நீங்களே சுத்தமான முறையில் தயாரித்துக்குடுத்து மகிழுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Teenu & Moni's Life
Teenu & Moni's Life @cook_27243006
அன்று

Similar Recipes