முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)

#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு
முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு நறுக்கி வைத்த தக்காளி சிறிது உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும் பிறகு இதனுடன் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
- 2
குறைந்த தீயில் 10 நிமிடம் வைக்கவும்... எண்ணெய் பிரிந்து மேலே வரும் பொழுது அடுப்பை அணைத்து பரிமாறவும்
- 3
பாத்திரத்தில் கோதுமை மாவு சிறிது உப்பு நெய் சேர்த்து தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும்
- 4
மற்றொரு பாத்திரத்தில் முட்டை நறுக்கிய வெங்காயம் மிளகாய்தூள் சிறிது உப்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்
- 5
சப்பாத்தி மாவில் சிறு உருண்டை எடுத்து வட்டமாக தேய்த்துக் கொள்ளவும் பிறகு தோசை சட்டியை சூடு செய்து சப்பாத்தியை இருபுறமும் சுட்டு எடுக்கவும் பிறகு ஒருபுறத்தில் தயாரித்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றி ஒரு நிமிடம் வைக்கவும்
- 6
சுற்றிலும் எண்ணெய் விட்டு பிறகு திருப்பிப் போட்டு 30 நொடிகள் வைத்து எடுக்கவும்
- 7
சுவையான முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு தயார்
Keywords
Similar Recipes
More Recipes





















கமெண்ட் (5)